ரெயிலில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை..!!

Read Time:4 Minute, 24 Second

201608061223506605_molested-attempt-to-college-girl-on-train_SECVPFபுதுச்சேரியில் இருந்து கேரளா வழியாக மங்களூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் இரவு புதுச்சேரியில் இருந்து புறப்பட்டது.

இந்த ரெயிலில் புதுச்சேரி பகுதியில் உள்ள கல்லூரி மாணவ-மாணவிகள் ஏராளமானோர் பயணம் செய்தனர். முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்த இவர்கள் இரவு ஆனதும் அவரவர் படுக்கையில் தூங்க தொடங்கினர்.

இந்த பெட்டிகளில் முன்பதிவு செய்யாத சில பயணிகளும் இருந்தனர். இதுபற்றி பயணிகள் ரெயில்வே ஊழியர்களிடமும், போலீசாரிடமும் புகார் செய்தனர். மேலும் முன்பதிவு பெட்டிகளில் போலீசார் ரோந்து வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் ரெயில் புதுச்சேரியில் புறப்பட்டு ஈரோடு வரும்வரை போலீசார் யாரும் முன்பதிவு பெட்டிகளுக்கு ரோந்து வரவில்லை. ரெயில் ஈரோடு நிலையத்தில் இருந்து புறப்படும்போது முன்பதிவு பெட்டியில் பயணம் செய்த கல்லூரி மாணவி ஒருவர் அலறினார்.

சத்தம் கேட்டு சக பயணிகள் கண் விழித்து பார்த்தனர். அப்போது மாணவி தூங்கிய ‘பெர்த்’தில் இருந்து சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் கீழே இறங்கி ஓடினார். அவரை சக பயணிகள் பிடிக்க முயன்றனர். அதற்குள் அந்த நபர் ஓடும் ரெயிலில் இருந்து கீழே குதித்து தப்பி விட்டார்.

சம்பவம் பற்றி மாணவி கூறும்போது, படுத்திருந்த தன்னிடம் அந்த வாலிபர் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டதால் கத்தியதாக தெரிவித்தார். இதைக்கேட்டு ஆத்திர மடைந்த பயணிகள் உடனடியாக செல்போன் மூலம் ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அந்த பெட்டியில் பயணம் செய்த சக மாணவ- மாணவிகளும் இந்த சம்பவத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். ரெயிலில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்யும் பெண்களுக்கு கூட பாதுகாப்பு இல்லையே என்று அவர்கள் குமுறினர்.

இதுபற்றி ரெயிலில் பயணம் செய்த மாணவ – மாணவிகள் கூறியதாவது:-

புதுச்சேரியில் ரெயில் புறப்பட்டது முதல் முன்பதிவு பெட்டியில் போலீசார் யாரும் கண்காணிப்புக்கு வரவில்லை. இதுபற்றி புதுச்சேரி ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தோம், யாரும் அதை கண்டுகொள்ள வில்லை. போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தால் இத்தகைய சம்பவம் நடந்திருக்காது.

அதிகாரிகள் மற்றும் போலீசாரின் மெத்தனத்தால் மாணவிக்கு பாலியல் தொல்லை நேர்ந்துள்ளது. இந்த பிரச்சினையை சாதாரணமாக விட மாட்டோம். பெண்களுக்கும், மாணவிகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை குறித்து ரெயில்வே உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவிப்போம். மேலும் இதனை பிரதமரின் கவனத்திற்கும் கொண்டு செல்வோம்.

இவ்வாறு அவர்கள் ஆவேசமாக கூறினர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உத்தரகாண்டில் நிலச்சரிவு: ஒருவர் பலி -சர்தாம் யாத்திரை தொடர்ந்து பாதிப்பு…!!
Next post ஓடும் பஸ்சில் நண்பருடன் சேர்ந்து காதலியை கற்பழித்து கொன்ற டிரைவர்…!!