15 நாட்கள் இறந்தே பிறந்த தன் குழந்தையுடன் வாழ்ந்த பாசமிகு தாய்…!!
லின்சே பெல், எல்லா பெண்களையும் போல தனக்கு பிறக்க போகும் குழந்தையை எதிர்பார்த்து மிகவும் ஆசையாக காத்திருந்த தாய். பொதுவாகவே ஆண்களுக்கு பெண் குழந்தை மீதும், பெண்களுக்கு ஆண் குழந்தை மீதும் அதீத அன்பும், பாசமும் இருக்கும்.
அந்த வகையில் லின்சே பெல்-க்கு தன் கருவில் வளர்ந்துவரும் சிசு ஆண் என்பது தெரியும். அதனாலோ என்னவோ லின்சே பெல்-க்கு ஏற்கனவே டைசி, மேக்ஸ் பாப்பி எனும் மூன்று குழந்தைகள் இருந்த போதிலும், கருவில் வளரும் இந்த குழந்தை மீது அதீத அன்புக் கொண்டிருந்தார்.
முன்சூல்வலிப்பு (preeclampsia)
முன்சூல்வலிப்பு என்பது பிரசவ காலத்தில் அரிதாக சில பெண்களுக்கு ஏற்படும் இரத்த அழுத்த பாதிப்பு ஆகும். இந்த பாதிப்பால் இரத்த அழுத்தம் வேகமாக ஏறும், இறங்கும் . இது தாய், செய் இருவருக்கும் நல்லதல்ல. இதனால், லின்சே பெல் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகவும் பலவீனம் ஆனார்.
சிகிச்சை!
28வது வாரம் சிகிச்சைக்கு சென்ற போது, குழந்தை சரியான வளர்ச்சி இன்றி காணப்பட்டுள்ளது. 32வது வாரம் வளர்ச்சி சீராக வளர்ந்து வருவதை கண்டறிந்தனர். இதனால், மார்க்-க்கு தன் மகன் ஆரோக்கியமாக பிறப்பான் என்ற நம்பிக்கை வலுத்தது. லின்சே பெல்லும் இதை நம்பினார்.
வளர்ச்சி குறைபாடு!
32வது வாரத்திற்கு பிறகு குழந்தையிடம் வளர்ச்சி இல்லை. லின்சே பெல்லுக்கு வலி தான் அதிகமானது. வீட்டிலேயே இரத்த அழுத்தம் சரிப்பார்த்து. இரத்த அழுத்தத்தில் மாற்றம் காணும் போதெல்லாம் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார் லின்சே பெல்.
கருக்கலைப்பு!
ஓர் கட்டத்தில் இரத்த அழுத்தம் அதிகரித்து, வீக்கம் அதிகரித்ததால் வலியை தாங்கிக் கொள்ள முடியாமல். தன் கணவர் மார்க்கிடம், இந்த குழந்தயை கலைத்துவிடலாம். வலி தாங்க முடியவில்லை. என அழுதுள்ளார் லின்சே பெல். மீண்டும் ஸ்கேன் செய்து பார்த்து குழந்தை நன்கு கருவறையில் நன்கு உலாவி வளர்ந்து வளர்கிறான். இவன் ஆரோக்கியமாக பிறப்பான் என மார்க் தன் மனைவி லின்சே பெல்லுக்கு ஊக்கமளித்துள்ளார்.
வீடு திரும்பிய சில நாட்களில்…
இதன் பின் வீடு திரும்பிய சில நாட்களில் லின்சே பெல்லுக்கு மிகுந்த வலி ஏற்பட்டுள்ளது. தனக்கு பிரசவ நேரம் நெருங்கிவிட்டதாக கருதி மருத்துவமனைக்கு கால் செய்து, என்னால் வலியை பொறுத்துக் கொள்ள முடியவில்லை என கூறியுள்ளார் லின்சே பெல். உடனே, மார்க் மற்றும் இவரது தம்பி மைக்கேல் இருவரும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
சிறுநீர் பரிசோதனை!
சிறுநீர் பரிசோதனை செய்ததில், லின்சே பெல்லின் உடலில் புரதம் அளவிற்கு அதிகமாக இருப்பது தெரியவந்தது. லின்சே பெல் மிகவும் அச்சமுற்றார். நர்ஸ், மருத்துவரை அழைத்து வந்து பரிசோதித்த போது தான் சிசு கருவிலேயே இறந்துவிட்டது என்பது தெரியவந்தது.
வெளியே எடுக்க சொன்ன லின்சே பெல்!
மருத்துவர்கள் கருவறையிலேயே டைல்யூட் செய்து அகற்றிவிடலாம் என கூறினார். ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்து இறந்தாலும் பரவாயில்லை நான் என் மகனை பார்க்க வேண்டும். வெளியே எடுங்கள் என லின்சே பெல் கூறினார்.
அறுவை சிகிச்சை!
பிறகு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து இறந்த குழந்தையை வெளியே எடுத்தனர். ஆனால், அறுவை சிகிச்சை முடிந்த பிறகு லின்சே பெல் இரண்டு நாள் கோமா நிலைக்கு சென்றுவிட்டார். இரண்டு நாள் கழித்து அவர் விழித்த போது இறந்தே பிறந்த ரோரியை (பெயர்) கெடாமல் ப்ரிசர்வ் செய்து வைத்து லின்சே பெல்லிடம் காண்பித்தனர்.
லின்சே பெல் கோரிக்கை!
இதனால், எத்தனை நாட்கள் முடியுமோ அத்தனை நாட்கள் என் குழந்தயை ப்ரிசர்வ் செய்து வையுங்கள். நான் அவனுக்காக நிறைய கனவுகள் கண்டு வைத்திருந்தேன். அதில் சிலவற்றை அவனுக்கு நான் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
15 நாட்கள்…
அவரது கோரிக்கைகாக ரோரியை 15 நாட்கள் ப்ரிசர்வ் செய்து வைத்தனர். கடைசி நாள் வீட்டிற்கு அழைத்து சென்று கதைகள் சொல்லி, புதிய உடைகள் உடுத்தி, தான் ஆசையாக வளர்க்க நினைத்த மகனை, மன இறுக்கத்துடன் அடக்கம் செய்தனர் மார்க்கும் லின்சே பெல்லும்.
Average Rating