மருத்துவராக பணியாற்றவுள்ள முன்னாள் மிஸ் இங்கிலாந்து அழகுராணி..!!

Read Time:2 Minute, 54 Second

1812445மிஸ் இங்­கி­லாந்து அழ­கு­ரா­ணி­யாக முடி­சூட்­டப்­பட்ட முன்னாள் அழ­கு­ராணி ஒருவர் மருத்­து­வ­ராக பணி­யாற்­ற­வுள்ளார்.

அழகும் அறிவும் இணை­வ­தில்லை என சிலர் கூறுவர். ஆனால், அக்­க­ருத்து தவ­றா­னது என்­பதை நிரூ­பித்துள்ளார் கரீனா டைரெல் எனும் இந்த யுவதி.
26 வய­தான கரீனா டைரெல் ஒக்ஸ்­போர்ட்­ஷயர் பிராந்­திய அழ­கு­ரா­ணி­யாகத் தெரி­வா­ன­துடன் 2014 ஆம் ஆண்டு மிஸ் இங்­கி­லாந்து அழ­கு­ரா­ணி­யாக முடி­சூட்­டப்­பட்டார்.

2015 ஆம் ஆண்டு ஐக்­கிய இராச்­சிய (மிஸ் யுனைடெட் கிங்டம் 2015) அழ­கு­ரா­ணி­யா­கவும் அவர் தெரி­வானார்.

பிரிட்­ட­னி­லுள்ள உலகப் புகழ்­பெற்ற பல்­கலைக் கழ­க­மான கேம்­பிரிட்ஜ் பல்­க­லைக்­க­ழ­கத்தில் மருத்­துவ பீட மாண­வி­யாக இருந்த வேளை­யி­லேயே அவர் மிஸ் இங்­கி­லாந்து அழ­கு ­ரா­ணி­யாகத் தெரி­வா­கி­யி­ருந்தார்.

2014 ஆம் ஆண்டு உலக அழ­கு­ராணி போட்­டியில் இங்­கி­லாந்து சார்­பாக கலந்­து­கொண்ட கரீனா டைரெல், அப்­போட்­டியில் முதல் 5 அழ­கிகளில் ஒரு­வ­ராகத் தெரி­வு ­செய்­யப்­பட்­டி­ருந்தார்.

கடந்த வாரம், அவர் தனது 6 வரு­ட­கால மருத்­துவக் கல்­வியை பூர்த்தி செய்து மருத்­துவப் பட்­ட­தா­ரி­யானார்.

கடந்த 3 வரு­டங்­களில் பரீட்­சை­களில் விசேட சித்­திகள், பல்­வேறு பரி­சு­களை வென்ற கரீனா டைரெல் முதல் வகுப்பில் சித்­தி­ய­டைந்து மருத்­துவப் பட்­ட­தா­ரி­யா­கி­யுள்ளார்.

மருத்­து­வ­ராக பணி­யாற்­று­வ­தற்­கான அழைப்பும் அவ­ருக்கு கிடைத்­துள்­ளது.

கேம்­பிரிட்ஜ் பல்­க­லைக்­க­ழத்தின் போட்­டிக்­கு­ரிய பல்­க­லைக்­க­ழ­க­மாக விளங்கும் ஒக்ஸ்போர்ட் பல்­க­லைக்­க­ழகம் அமைந்­துள்ள ஒக்ஸ்போர்ட் நக­ரி­லேயே அவர் மருத்­து­வ­ராக பணி­யாற்­ற­வுள்ளார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மகளிர் கால்பந்தாட்ட அணியில் இடம்பெற்றிருந்த கரீனா டைரெல், யாசகர்களுக்கு உதவுவதற்கான தொண்டுப் பணிகளிலும் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வலி வடகில் விடுவிக்கப்படக்கூடிய எஞ்சியுள்ள காணிகள் தொடர்பில் மீளாய்வு…!!
Next post கேள்விக்குள்ளாகும் தமிழரின் அரசியல் அபிலாஷை..!!