உனக்கு 17 – எனக்கு 71: அமெரிக்காவில் நடந்த வினோத திருமணம்..!!

Read Time:3 Minute, 26 Second

201607221451086550_71-yearold-woman-has-married-a-17-year-old-boy-in-Tennessee_SECVPFமகனின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள சென்ற 71 வயது மூதாட்டி அங்கு சந்தித்த 17 வயது இளைஞனை திருமணம் செய்து வாழ்ந்துவரும் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் டென்னெசி மாநிலத்தில் உள்ள செவியர்வில்லி பகுதியை சேர்ந்தவர் அல்மெடா எர்ரெல். 71 வயது பெண்மணியான இவர் சமீபத்தில் மாரடைப்பால் இறந்துப்போன தனது 45 வயது மகனின் இறுதிச் சடங்கில் பங்கேற்றபோது, கேரி ஹார்ட்விக் என்ற 17 வயது இளைஞரை சந்தித்தார்.

43 ஆண்டுகளாக தன்னுடன் அன்னியோன்யமாக வாழ்ந்துவந்த தனது கணவர் டொனால்ட் கடந்த 2013-ம் ஆண்டு இறந்த பின்னர் தனிமரமாக வாழ்ந்துவந்த அல்மெடாவுக்கு கேரியை முதல்பார்வையிலேயே மிகவும் பிடித்துப் போனது. மீசை முளைக்காத பருவத்திலேயே ‘காதல் மன்னன்’ ஆக திகழந்த கேரிக்கும் அல்மெடா மீது ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டது.

எட்டு வயது சிறுவனாக இருந்தபோதே தனது ஆசிரியைமீது காதல்வசப்பட்ட கேரி, பின்னாளில் தன்னைவிட வயதில் மூத்த பெண்களை காதலிப்பதிலும், உறவு வைத்துக் கொள்வதிலும் அதிகமாக ஆர்வம்காட்ட ஆரம்பித்தார். கடைசியாக தன்னுடன் தொடர்பு வைத்திருந்த 77 வயது காதலியுடனான நட்பு கசந்துப்போய் சோகத்தில் மூழ்கியிருந்த கேரியின் கண்களுக்கு அல்மெடா ஒரு பாலைவனச்சோலையாக காட்சியளித்தார்.

கேரியின் அத்தையும் அல்மெடாவின் மருமகளுமான லிசாவின் துணையுடன் ஒருபிறந்தநாள் நிகழ்ச்சியின்போது இருவரும் மீண்டும் ஒருமுறை சந்தித்து கொண்டனர். மகனின் மரணத்தால் மனமுடைந்துப் போயிருந்த அல்மெடாவுக்கு மெல்ல ஆறுதல் சொல்வதுபோல் நட்புக்கான கடலை விதையை தூவிய கேரி, அடுத்த ஒருவாரத்துக்குள் தனது எண்ணத்தை வெளிப்படுத்தி, இரவுவேளைகளில் அல்மெடாவை தனிமையில் சந்தித்து காதல் பயிரை அறுவடை செய்தார்.

இருதரப்பு உறவினர்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும் கடந்த அக்டோபர் மாதம் திருமணம் செய்துகொண்டு தம்பதியராக மாறிவிட்ட இந்த காதல்ஜோடிகள் ஒருவர் பெயரை மற்றவரது மார்பில் பச்சை குத்திக்கொண்டு காதல்வானில் சிறகடித்தபடி இணைபிரியா தம்பதியராக வாழ்ந்து வருகின்றனர்.

இந்த வாழ்க்கைக்கு கேரியின் 48 வயது தாயாரும், அல்மெடாவின் வயதையொத்த 71 வயது பாட்டியான கரோலினும் ஆசி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெற்ற மகளையே ரூ.1 லட்சம் கொடுத்து கொன்ற தந்தை…!!
Next post வடகொரியா விமானத்தில் திடீர் தீ: சீனாவில் அவசரமாக தரையிறக்கம்…!!