யாழில் அண்மையில் இடம்பெற்ற மோதல் குறித்து தமிழ் மாணவர்களுக்காக சிங்கள மாணவி…!!
யாழ் பல்கலைக்கழகத்தில் இடைம்பெற்ற மோதல் சம்பவத்தை மையமாகக் கொண்டு 22 வயதுடைய நாவலாசிரியர் ஒருவர் கட்டுரை எழுதியுள்ளார்.
இலங்கையின் இலக்கிய விருது பெற்றவரும், சர்வதேச எழுத்தாளர்கள் திட்டத்தின் உலகின் இளம் தேசிய வேட்பாளருமான, அரசியல் பொருளாதாரம் மற்றும் கல்வி சீர்திருத்த கல்வி கற்று வருபவருமான கொழும்பை சேர்ந்த திருச்சி வன்னியாராச்சி என்ற 22 வயதுடைய பெண்ணே இந்த கட்டுரையை எழுதியுள்ளார். அவருடைய கட்டுரையில் எழுதப்பட்டுள்ளதாவது,
“எனக்கு தெரிந்த உரிமை குறித்து நான் இதை எழுதுகின்றேன்.
நான் நன்மைகள் குறித்து நன்கு அறிவேன்.சாதாரண சிங்கள பௌத்த குடும்பத்தில் பிறந்தவரே நான்.
தாய்நாட்டை விட்டு சற்று வெளியில் சென்று பார்ப்போமாயின், சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை விவாதங்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கேன். ஆனால் இது குறித்து கலந்துரையாடல்களை மேற்கொள்ள பயமாக உள்ளது.
ஆம், நாம் அனைவரும் பெரும்பான்மையினர்களே எங்களால் அனைவர் முன்னாலும் வாழ இயலும் இருப்பினும் இதை உணர்வார் எவரும் இல்லையே,
பல தசாப்தங்களாக இடம் பெற்ற மோதல் குறித்தான நியாயமான கோபங்கள் தொடர்பில் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.
குற்றங்கள் எமது மக்களுக்கு எதிராகவே இடம் பெறுகின்றன. இது புரியாமல் கண்மூடித்தனமாக அனைவருக்கும் உற்சாகமூட்டுகின்றோம். இவை அனைவரினதும் அறியாமையா?
நாம் அனைவரும் இலங்கையர்களே! எமது பெற்றோர்கள் மற்றும் முதியவர்களின் தவறுகளை ஏன் நாமும் எமது வாழ்வில் பின்பற்ற வேண்டும்? எமது எதிர்காலத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்.
ஆனால் இதற்கான தீர்வு வன்முறை கிடையாது.
உரிமை பற்றி கூறுவதற்கு இவள் யார் என்று நீங்கள் சிரிக்க கூட நேரிடும்?ஆனால் சற்று அமைதியாக இருந்து யோசிப்போமாயின் சர்வதேச ரீதியில் அதிகளவான மனிதாபிமான சட்டங்கள் இருக்கின்றன. பின்னர் எதற்கு வன்முறை?
இவ்வாறு கடந்த 30 ஆண்டுகளாக மோதல்கள் இடம் பெற்றன. அதன் பின் என்ன ஆயிற்று? அநீதியான முறையிலேயே அனைத்து மோதல்களும் இடம் பெறுகின்றன.
ஆனால் இது உங்களது நேர்மையான தீர்வு. சிலருக்கு தெரியும் சிங்களவர்கள் எவ்வாறு சிந்திப்பார்கள் என்று. ஆனால் வன்முறை ஒரு சிறந்த வழியாக இருக்க முடியாது.
இலங்கை தமிழ் சமூகத்துக்கு ஏன் இந்த அவல நிலை. நாம் கண்டிப்பாக கடந்த தசாப்தங்களில் இடம் பெற்ற வன்முறைகளை முற்றாக அகற்ற வேண்டும். கொள்கைகளை பின்பற்ற வேண்டும்.
நீங்கள் தலைமறைவாகவோ அல்லது சிறையில் கைதிகளாகவோ, தெருக்களைச் சேர்ந்தவர்களோ அல்ல நீங்கள் அதிகார அந்தஸ்தில் உள்ளவர்கள்.உங்களால் சில கொள்கைகளுக்காக போராட இயலும்.
இலங்கையில் அரசியலில் மாத்திரம் சிறுபான்மை இல்லை என்பதை மறக்க வேண்டும், முற்றாக மாற்ற வேண்டும்.
பாதையில் பெண்களுக்கு தனியாக நடந்து செல்ல முடிகின்றதா? உடல் ரீதியாக பெண்களே பாதிக்கப்படுகின்றனர்.
நாம் இந்த உலகத்தில் சமூக மற்றும் அரசியல் அமைப்புகளிலேயே வாழ்ந்து வருகின்றோம்.
இவ்வாறு பெண்கள் பாலியல் வல்லுறவுகளுக்கு உட்படுவதை எம்மால் தடுக்க இயலும். எங்களைச் சூழ உள்ளவர்களை மாற்றினால் மாத்திரமே இதை அடையவும் முடியும்.
வன்முறை இல்லாத வாழ்வை தெரிவு செய்து எதிர்காலத்தை செம்மை படுத்துவோம்” என குறித்த கட்டுரையில் எழுதப்பட்டுள்ளது.
Average Rating