உடல் உபாதைகளுக்கு பாட்டி வைத்தியம் ட்ரை பண்ணுங்க…!!
உடலில் பிரச்சனைகள் வரத்தான் செய்யும். ஆனால் தொட்டதற்கெல்லாம் மருந்து மாத்திரைகளை சாப்பிடும் காலம் வந்தாச்சு.
இதனால் நோய்களும் புதிதாக வந்தபடிதான் இருக்கிறது. சின்ன சின்ன உபாதைகளுக்கு வீட்டிலேயே இயற்கையான மருத்துவம் குணம் பெற்ற பொருட்களைக் கொண்டு சரி செய்து கொள்ளுங்கள். இதனால் உங்கள் நோயெதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும்.
நோய்களும் நெருங்காது. அப்படியான நம் முன்னோர் சொல்லிவிட்டுச் சென்ற சில வைத்தியங்களைப் பார்க்கலாம்.
ஆறாத புண்களுக்கு :
ஆறாத புண் விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் புண்களில் தடவினால், நாள்பட்ட புண்களும் ஆறிவிடும்.
மலச்சிக்கலுக்கு :
தினமும் குடி நீரில் சுக்கை தட்டிப் போட்டு கொதிக்க வையுங்கள். 10 நிமிடங்கள் கழிந்ததும், அதனை ஆறவைத்து குடித்தால் மலச்சிக்கல் நீங்கும். பல மருத்துவ குணங்களைக் கொண்ட இது , ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும்.
காலையில் வெதுவெதுப்பான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். மலச்சிக்கல் இருக்காது.
அஜீரணத்திற்கு :
ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் குணமாகும் அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடித்தாலும் அஜீரணம் சரியாகிவிடும்.
நெஞ்சுக் கபம் நீங்க :
தேங்காய் எண்ணையை சூடாக்கி, அதில் கற்பூரம் போட்டு, கரைய வைக்கவும். அடுப்பை குறைந்த அளவில் வைக்கவும்.
இல்லையென்றால், கற்பூரம் எரிய ஆரம்பித்துவிடும். அடுப்பிலிருந்து சற்று தள்ளியே கரண்டியை வைக்கவேண்டும். பின்னர் இந்த எண்ணையை நெஞ்சில் தடவினால், குழந்தைகளுக்கு கபம் கரைந்துவிடும்.
வயிற்றுப்புண் :
பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும் தாய்ப்பால் சுரக்க : தாய்ப்பால் சுரக்க அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் அதிகரிக்கும். நிலக்கடலை அதிகம் சாப்பிட்டாலும் பால் சுரக்கும்.
பித்த நோய்களுக்கு :
கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.
ரத்தக்கொதிப்பினால் வரும் தலை சுற்றலுக்கு
வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.
பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.
Average Rating