பிரான்ஸ் தாக்குதலில் 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி…!!

Read Time:4 Minute, 5 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (4)பிரான்சின் நீஸ் நகரில் டிரக் ஏற்றி நடத்தப்பட்ட தாக்குதலில் 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகியுள்ளதாக, அந்நகரத்தின் முன்னாள் மேயர் கூறியுள்ளார்.

மேலும், பிரான்சின் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி பிரான்ஸ் நன்கு சிந்தனை செய்து முடிவு செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்து 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இளைஞர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களுக்கு தலையில் காயம் மற்றும் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களின் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு உளவியல் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் நடந்த தாக்குதலை தொடர்ந்து 3 நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் கூறியுள்ளார்.

இதனிடையே, நீஸ் தாக்குதல் குறித்து ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு சொந்தமான ரேடியாவில் எதுவும் கூறப்படவில்லை.

பல தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக்கொண்டதாக கூறிவரும் அந்த அமைப்பு, இந்த தாக்குதல் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என பி.பி.சி., நிறுவனம் கூறியுள்ளது.

இதனிடையே, இந்த சம்பவத்தில் பலியான சிலரின் அடையாளம் தெரியவந்துள்ளது. அதில், 60 வயதான பிரெஞ்ச் நபர், அமெரிக்காவை சேர்ந்த தந்தை மகன், சுவிட்சார்லாந்து மற்றும் ரஷ்யாவை சேர்ந்த ஒருவர் மற்றும் இரண்டு அமெரிக்கர்கள் என அடையாளம் தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இங்கிலாந்து முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அந்நாட்டு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தை நடத்தியது டுனுஷியாவில் பிறந்து பிரான்சில் குடியுரிமை பெற்ற நபர் என முதல்கட்ட தகவல்கள் தெரிவித்தன.

இதனையடுத்து மேலும் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த நபரின் பெயர், முகமது எனவும், அவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், அவருக்கு மதத்தின் மீது முழு நம்பிக்கை கிடையாது என அவரின் உறவினர்கள் கூறியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் காணாமல் போனவர்களை கண்டறிய பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வாயிலாக அவர்களின் உறவினர்கள் தேடி வருகின்றனர்.

இதற்காக அந்நாட்டு பத்திரிகை ஒன்று பேஸ்புக்கில் சிறப்பு பக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதில், காணாமல் போனவர்களின் புகைப்படத்தை வெளியிடலாம் எனக்கூறியுள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவும் வகையில் ரத்தம் தேவைப்படுவதாக போலீசார் மற்றும் மருத்துவர்கள் அறிவித்தனர்.

இதனையடுத்து அந்நாட்டு மக்கள் ஏராளமானோர்கள் ரத்தம் கொடுத்தனர்.

இதனையடுத்து போதுமான ரத்தம் கிடைத்துள்ளதாகவும், இதற்காகநன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முட்டை பிரியர்களே!… இதோ உங்களுக்கான அதிர்ச்சிக் காட்சி…. இனி உஷாராக இருங்கள்…!! வீடியோ
Next post மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்ட மூவர் கைது…!!