5 மாணவர்களும் உயிருடனுள்ளனர் – வைபரில் செய்தி வந்ததாக பெற்றோர் தெரிவிப்பு…!!
கடந்த 2008 ஆம் ஆண்டு தெஹிவளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து கடத்தப்பட்ட ஐந்து மாணவர் உள்ளிட்ட 11 பேரில் மாணவர்கள் அனைவரும் உயிருடனேயே உள்ளதாக, பாதிக்கப்பட்டோரின் உறவுகளுக்கு வைபர் ஊடாக செய்தி அனுப்பட்டுள்ளதாக மாணவர்களின் பெற்றோர் தெரிவித்தனர். கடந்த 10 ஆம் திகதி நள்ளிரவில் சவூதி அரேபியாவில் உள்ள உறவினர் ஒருவர் ஊடாக தாம் இந்த செய்தியை அறிந்துகொண்டதாக கடத்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களில் ஒருவர் வீரகேசரி இணையத்தளத்திடம் தெரிவித்தார்.
ஐந்து மாணவர் கடத்தல் விவகாரம் தொடர்பிலான வழக்கு இன்று கோட்டை நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்ற நிலையில் வழக்கு முடிந்து வெளியே வந்த போதே குறித்த பெற்றோர் இதனைத் தெரிவித்தனர். அதனால் தமது பிள்ளைகள் உயிருடன் இருப்பதாக தாம் உறுதியாக நம்புவதாகவும் அவசரமாக அவர்களை மீட்டுத் தந்தால் போதுமானது எனவும் அப்பெற்றோர் உருக்கமாக தெரிவித்தனர்.
ராஜீவ் நாகநாதன் , பிரதீப் விஸ்வநாதன், திலகேஸ்வரன் இராமலிங்கம் ஆகியோருடன் மொஹமெட் சஜித், மொஹமட் டிலான் ஆகிய ஐந்து மணவர்கள் உள்ளிட்ட 11 பேர் 2008 ஆம் ஆண்டுக்கும் 2009 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் தலை நகரின் பல பிரதேசங்களில் இருந்தும் கடத்தப்பட்டு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கபப்டுகிறது.
எனினும் அவர்களுக்கு என்ன ஆனது என்பது குறித்து எவ்வித தகவல்களும் இது வரை இல்லை. இந் நிலையிலேயே கடந்த 10 ஆம் திகதி இரவு வைபர் ஊடாக ராஜீவ் நாகநாதன் என்ற கடத்தப்பட்ட மாணவனின் தாய்க்கு வைபர் ஊடாக அவரது மகன் உள்ளிட்ட ஐவரும் உயிருடன் இருக்கும் செய்தி அனுப்பட்டுள்ளதாக பெற்றோர் தெரிவித்தனர்.
இதனைவிட குறித்த ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட மேலும் பலர் திருகோண மலையில் இருந்து கொழும்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்ரனர். இந் நிலையில் அவர்களை மீட்டுத் தருமாறும் அவர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.
எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பில் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவரை வீரகேசரி இணையத்தளம் தொடர்புகொன்டு வினவியது. எனினும் இது குறித்து தமக்கு எவ்வித தகவல்களும் பதிவாகவில்லை என குறிப்பிட்ட அந்த அதிகாரி சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை செய்து வருவதாக குறிப்பிட்டார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating