பற்கள் சொத்தையாகாமல் இருக்க வேண்டுமா? அப்ப இந்த பழக்கங்களை கைவிடுங்க…!!

Read Time:4 Minute, 14 Second

09-1468045184-1-drinksஉங்களுக்கு அடிக்கடி பல் வலி அல்லது பல் கூச்சம் ஏற்படுகிறதா? அப்படியெனில் உங்கள் பல் சொத்தையாகிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். ஆரம்பத்திலேயே இதனைக் கண்டுக் கொள்ளாமல் இருந்தால், நாளடைவில் பற்கள் பலவீனமாகி, பல் வேர்களில் உள்ள செல்கள் அழிக்கப்பட்டு, பற்களை இழக்க வேண்டியிருக்கும்.

பற்கள் சொத்தையாவதற்கு காரணம் நாம் உண்ணும் உணவுகள் மற்றும் சில பழக்கவழக்கங்கள் தான். மோசமான உணவுப் பழக்கம் உடல் ஆரோக்கியத்தைப் பாதிப்பதற்கு முன்னதாகவே, பற்களின் ஆரோக்கியத்தைப் பாதித்துவிடும். எனவே பற்கள் ஆரோக்கியமாக சொத்தையாகாமல் இருக்க வேண்டுமானால், கீழே கொடுக்கப்பட்டுள்ள பழக்கவழக்கங்களைத் தவிர்த்திடுங்கள்.

சர்க்கரை மிகுந்த பானங்கள்

பற்கள் சொத்தையாவதற்கு சர்க்கரை முதன்மையான ஒரு காரணம் என்று பல நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே உங்கள் பற்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், சர்க்கரை கலந்த பானங்களான சோடா, குளிர் பானங்களைக் குடிப்பதைத் தவிர்த்திடுங்கள்.

வைட்டமின் மாத்திரைகள்

நிறைய வைட்டமின் மாத்திரைகள் கடித்து சாப்பிடுமாறு கடைகளில் விற்கப்படுகிறது. இருப்பினும், அதில் உள்ள அசிட்டிக் உள்ளதால், தொடர்ந்து அவற்றை கடித்து மென்று விழுங்கும் போது, பற்கள் சொத்தையாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே அப்பழக்கத்தைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.

நகம் கடிப்பது

பலருக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருக்கும். இது ஆரோக்கியமற்ற பழக்கம் என்று கூறியும், இன்னும் அப்பழக்கத்தைக் கைவிடாமல் ஏராளமானோர் உள்ளனர். உண்மையில் ஏன் நகம் கடிக்கக் கூடாது என்றால், நகங்கள் பற்களின் எனாமலைப் பாதித்து, பற்களை சொத்தையாகச் செய்யும். உங்களுக்கு சொத்தைப் பற்கள் வரக்கூடாது என்றால்

கடுமையாக பற்களை துலக்குவது

எவர் ஒருவர் பற்களை மிகவும் கடுமையாக துலக்குகிறாரோ, அவரது பற்களின் எனாமல் தேய்ந்து, அதனால் பற்கள் சென்சிடிவ் ஆகி, நாளடைவில் பற்களை சொத்தையாக்கும். எனவே பற்களை எப்போதும் மென்மையாக தேய்த்து வாருங்கள்.

டூத் பிக் பயன்படுத்துவது

பற்களின் இடுக்குகளில் உள்ள உணவுத்துகள்களை நீக்குவதற்கு டூத் பிக் பயன்படுத்தப்படும். ஆனால் இந்த டூத் பிக்குகளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால், அதன் காரணமாக வாயில் உள்ள சென்சிடிவ் பகுதி மற்றும் ஈறுகள் பாதிக்கப்பட்டு, பற்கள் சொத்தையாகும் வாய்ப்பு அதிகரிக்கும்.

ஆல்கஹால்

பெரும்பாலான ஆல்கஹாலில் அசிட்டிக் அதிகம் இருக்கும். இந்த ஆல்கஹாலை அளவுக்கு அதிகமாக ஒருவர் அடிக்கடி பருகினால், பற்கள் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகி, வேகமாக பல் சொத்தையாகிவிடும்.

வலி நிவாரணிகள்

நிறைய வலி நிவாரணிகள் வாயில் எச்சிலின் உற்பத்தியைக் குறைக்கும். வாயின் எச்சிலின் சுரப்பு குறையும் போது அதனால் வாய் வறட்சி அதிகரித்து, அதன் விளைவாக எனாமல் அரிக்கப்படும் மற்றும் பல் சொத்தையடையும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்கு வந்த கர்ப்பிணியை தாக்கிய பெண் போலீசார்: பனிக்குடம் உடைந்து பெண் குழந்தை பிறந்தது…!!
Next post அப்பளமாக நொருங்கிய கார்… உள்ளே இருந்த வீரருக்கு என்னவாகியிருக்கும்…!! வீடியோ