மனைவியோட சந்தோசமா இருக்கணுமா? இந்த 10 விஷயத்த மறக்காம செம்மையா செய்யுங்க..!!

Read Time:3 Minute, 53 Second

09-1468055705-1dothesetenthingswithoutfailtorideasuccessfullovelifeகல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்ற பழமொழி இருக்கிறது. இதை நம்மில் பலர், கல் குடித்தாலும், புல் அடித்தாலும் கணவன், கணவன் தான் என புரிந்து வருகிறோம். ஆனால், கல் போல கடினமானவாக இருப்பினும், புல் போன்று மென்மையானவனாக இருந்தாலும், அவன் கணவன் தான் என்பது தான் பொருள்.

இதையும் படிங்க:

உடலுறவில் ஈடுபடும் போது ஆண்கள் செய்யும் 9 தவறுகள்! இது பெண்கள் கூறும் மற்றும் பெண்களுக்கு கூறப்படும் பழமொழி. இது கணவன் எப்படி இருந்தாலும், இல்லறம் நன்றாக செயல்பட கணவனை ஏற்று நடந்துக் கொள்ள வேண்டும் என கூறப்படுவது.

இந்த காலத்திற்கு இது ஒத்து வராது. எனவே, கணவன்மார்கள் மனைவியோட சந்தோசமாக இருக்க இந்த 10 விஷயங்களில் செம்மையாக செயல்பட வேண்டும்.

செயல் #1

பேசும் போது குறுக்கே குறுக்கே பேசாமல், இடையூறு செய்யாமல் அவர்கள் சொல்வதை தெளிவாக, முழுமையாக கேட்ட பிறகு பதில் பேசுங்கள்.

செயல் #2

குற்றம் கூறாமல் பேச கற்றுக்கொள்ளுங்கள். என்றோ நடந்த சம்பவத்தை எடுத்துக் கூறி, அவர்களை குற்றம் கூறி மட்டம் தட்டுவதை தவிர்த்துவிடுங்கள்.

செயல் #3

அன்பு, பாசம், அக்கறை, பாதுகாப்பு, என எதுவாக இருந்தாலும் சிக்கனம் இல்லாமல் முழுமையாக வெளிப்படுத்துங்கள்.

செயல் #4

போ, தொலைந்துபோ… எக்கேடுக்கேட்டு போ, ஒழிந்துபோ போன்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். அவர்கள் கேட்பதை செய்யும் போது புலம்பிக்கொண்டே செய்ய வேண்டாம்.

செயல் #5

சண்டைப் போடாமல் பதில் கூறுங்கள். பல தம்பதிகள் மத்தியில் கேள்விகள் எழும் போது உண்டாகும் சண்டைகளை விட, அதற்கான பதில்கள் கிடைக்கும் போதும், கூறும் போதும் தான் பெரிய சண்டைகள் வெடிக்கும்.

செயல் #6

பாசாங்கு இல்லாமல், நடிக்காமல், பொய் கூறாமல் உங்கள் துணையிடம் அனைத்தையும் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

செயல் #7

புகார் சொல்லாமல் புகழ்ந்து பேசுங்கள். சிலர், துணை என்னதான் நல்லது செய்தாலும், சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினாலும், எல்லாம் ஓகே தான் இது நொட்டை, அது சொத்தை என புகார் கூறுவார்கள். இதை தவிர்த்துவிடுங்கள்.

செயல் #8

சபலம், சந்தேகம் இல்லாமல் நம்புங்கள். நம்புகிறேன் என கூறிக் கொண்டு பின்னாடி உளவுத்துறை வேலை பார்ப்பது, வேவுபார்ப்பது போன்றவை தவறு.

செயல் #9

தண்டனை அளிக்காமல் மன்னிக்கும் பழக்கம் கடைபிடியுங்கள். தெரியாமல் செய்யும் தவறுகள் இயல்பு, தெரிந்தே செய்யும் தப்பு தான் குற்றம்.

செயல் #10

செய்யும் சத்தியத்தை மறக்க வேண்டாம், பின்னாட்களில் மறுக்க வேண்டாம். இது, பூக் கம்பகமாக இருக்கும் இல்லறத்தில் பூகம்பம் வெடிக்க செய்யும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாலி கட்டாமல் குடும்பம் நடத்திய பெண்ணிடம் ரூ.30 லட்சம் பணத்தை சுருட்டிய பலே ஆசாமி…!!
Next post மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சி செய்த நபர் கைது…!!