நஞ்சு ஊட்டப்பட்ட மிருகங்களின் இறைச்சியை உட்கொள்ள வேண்டாம் என எச்சரிக்கை…!!

Read Time:1 Minute, 31 Second

imagesநஞ்சு ஊட்டப்பட்ட மிருகங்களின் இறைச்சியை உட்கொள்ள வேண்டாம் என வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வன விலங்குகளை வேட்டையாடுவதற்கு சிலர் நஞ்சு வகைகளை பயன்படுத்துகின்றனர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வேட்டையாடப்படும் இறைச்சி வகைகளை உட்கொள்ளும் போது எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமென மக்களிடம் கோரப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் நிலவி வரும் கடும் வரட்சி காரணமாக தாகத்தை தீர்த்துக் கொள்ள வரும் மிருகங்களை நஞ்சூட்டி வேட்டையாடப்படுகின்றது.

இவ்வாறு நஞ்சூட்டி வனவிலங்ககளை கொன்றவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளனர் என வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் டப்.எஸ்.கே. பதிரத்ன தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சம்பவங்கள் பதிவானால் உடனடியாக 1992 என்ற அவசர அழைப்பு இலக்கத்திற்கோ அல்லது 011-2888585 என்ற இலக்கத்திற்கோ தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாணவிகள் மூவர் கடத்தல் – இருவர் அநாதரவான நிலையில் மீட்பு…!!
Next post இப்படியும் திருடுகிறார்கள் – மக்களே அவதானம்…!!