கை-கால் வலிப்பிற்கான சில ஆயுர்வேத வைத்தியங்கள்…!!

Read Time:6 Minute, 31 Second

04-1467629722-4-brahmi-600மூளை மற்றும் நரம்பு தொடர்பான பிரச்சனைகளில் தலைவலிக்கு அடுத்தப்படியாக இருப்பது காக்காய் வலிப்பு என்று அழைக்கப்படும் கை-கால் வலிப்பு தான். ஒருவருக்கு கை-கால் வலிப்பு எப்போது வேண்டுமானாலும், ஒருசில நொடிகள் முதல் சில நிமிடங்கள் வரை இருக்கலாம். பொதுவாக மூளை மற்றும் நரம்பு செல்கள் தகவல்களை பரிமாற்றம் செய்யும் போது, செல்களுக்கிடையே சிறிய அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

ஆனால் அப்படி உற்பத்தி செய்யும் மின்சாரம் அதிகமாகும் போது, அதனால் மின் புயல் உருவாகி, நரம்புகள் வழியே கடத்தப்படும் போது, உடல் உறுப்புக்களின் இயக்கத்தில் மாறுபாடு ஏற்பட்டு, கை மற்றும் கால்கள் வெட்டி வெட்டி இழுக்கும். இதைத் தான் கை-கால் வலிப்பு என்று சொல்வார்கள்.

கை-கால் வலிப்பு எந்த வயதினருக்கும் வரலாம். ஆனால் சரியான மருந்துகளை தொடர்ந்து எடுத்து வருவதன் மூலம், கை-கால் வலிப்பில் இருந்து முற்றிலும் விடுபட முடியும். சரி, இப்போது அந்த கை-கால் வலிப்பிற்கான சில ஆயுர்வேத வைத்தியங்களைப் பார்ப்போம்.

ஆயுர்வேத வைத்தியம் #1

பூண்டு பூண்டு காலங்காலமாக இந்திய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் ஓர் மருத்துவ குணம் வாய்ந்த பொருள். இது தசைப்பிடிப்புக்களுக்கு நல்ல சிகிக்சை வழங்கும். பூண்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டு மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி பொருள் உள்ளதால், அது கை-கால் வலிப்பு ஏற்படுவதைத் தடுக்கும்.

ஆயுர்வேத வைத்தியம் #1

உட்கொள்ளும் முறை 1/2 டம்ளர் பாலில். 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதில் 5 பூண்டு பற்களைப் போட்டு வேக வைத்து, பால் பாதியாகும் வரை கொதிக்க வைத்து இறக்கி, தினமும் குடித்து வர வேண்டும். இப்படி செய்து வந்தால், கை-கால் வலிப்பு விரைவில் குணமாகும்.

ஆயுர்வேத வைத்தியம் #2

பிராமி ஆயுர்வேதத்தில் கை-கால் வலிப்புக்கு பிராமி பரிந்துரைக்கப்படும் ஓர் மூலிகையாகும். இது மன அழுத்தத்தைக் குறைத்து, ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடி உடலுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கும். முக்கியமாக மூளை சம்பந்தமான கோளாறுகளை சரிசெய்யும்.

ஆயுர்வேத வைத்தியம் #2

உட்கொள்ளும் முறை கை-கால் வலிப்பு உள்ளவர்கள், தினமும் 5-6 பிராமி இலைகளை உட்கொள்ள வேண்டும். அப்படி உட்கொண்ட பின் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலைப் பருக வேண்டும். இப்படி தொடர்ந்து செய்வது வந்தால், கை-கால் வலிப்பு சீக்கிரம் போகும்.

ஆயுர்வேத வைத்தியம் #3

துளசி பெரும்பாலான இந்திய வீடுகளில் துளசி இருக்கும். இது ஒரு புனிதமாக செடியாக இந்திய மக்களால் கருதப்படும். இந்த துளசி பல்வேறு நோய்களுக்கு சிகிச்சைப் பொருளாக ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் கை-கால் வலிப்பும் ஒன்று. முக்கியமாக துளசி மன அழுத்தத்தைக் குறைத்து, மூளையின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ள உதவும்.

ஆயுர்வேத வைத்தியம் #3

உட்கொள்ளும் முறை தினமும் சிறிது துளசியை வாயில் போட்டு மென்று விழுங்கி வந்தால், நரம்பு மண்டலம் வலிமையடைவதோடு, மூளையின் ஆரோக்கியம் மேம்பட்டு, கை-கால் வலிப்பு ஏற்படுவது மெதுவாக குறையும்.

ஆயுர்வேத வைத்தியம் #4

வெள்ளை பூசணி வெள்ளை பூசணியும் ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படும் ஓர் பொதுவான மருத்துவ குணம் வாய்ந்த பொருளாகும். நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறுகளான பைத்தியம், சித்தபிரமை அல்லது வலிப்பு போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்க ஆயுர்வேதத்தில் வெள்ளைப் பூசணி பயன்படுத்தப்படும். மேலும் இது மூளை செல்களின் சீரான செயல்பாட்டிற்கு உதவும்.

ஆயுர்வேத வைத்தியம் #4

உட்கொள்ளும் முறை வெள்ளைப் பூசணியை ஜூஸ் போட்டு தினமும் காலையில் வெறும் வயிற்றில் வலிப்பு பிரச்சனை உள்ளவர்கள் குடித்து வந்தால், இந்த பிரச்சனை நீங்கும்.

ஆயுர்வேத வைத்தியம் #5

தேங்காய் எண்ணெய் தேங்காய் எண்ணெய் மூளையில் உள்ள நரம்பு செல்களுக்கு ஆற்றலை வழங்கி, மூளை அலைகளின் மீது நோய் தீர்க்கும் விளைவை உண்டாக்கும். முக்கியமாக தேங்காய் எண்ணெயில் உள்ள ஃபேட்டி அமிலம், கை-கால் வலிப்பில் இருந்து விடுபட உதவும்.

ஆயுர்வேத வைத்தியம் #5

உட்கொள்ளும் முறை தினமும் பலமுறை ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயைப் பருகி வரவும் மற்றும் சமையலில் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்த வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுநீரக கற்கள் உண்டாகாமல் தடுக்கும் வெள்ளரி ஜூஸ்..!!
Next post ஸ்கேட்டிங்கின் போது பனிக்கட்டிக்குள் புகுந்த பெண்… சில நொடிகளில் வாயில் மீனுடன் திரும்பி வந்த ஆச்சரியம்…!! வீடியோ