நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் 10 நாட்களுக்கு முன்பும் சுவாதி தாக்கப்பட்டார்: நேரில் பார்த்த ஆசிரியர் போலீசில் வாக்குமூலம்

Read Time:8 Minute, 46 Second

24-14614836நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் என்ஜினீயர் சுவாதி இதே நாளில் வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரை கொன்ற மர்ம வாலிபர் தப்பி ஓடிவிட்டார். இன்றுடன் 8 நாட்கள் ஆகியும் கொலையாளி சிக்கவில்லை. அவன் தப்பிச்செல்லும் போது அருகில் உள்ள சி.சி.டி.வி கேமிராவில் பதிவான கொலையாளியின் உருவத்தை வைத்து தேடுகிறார்கள். ஆனால் அதில் முகம் தெளிவாக இல்லாததால் கொலையாளி யார் என்று அடையாளம் காண முடியவில்லை.

சுவாதி கொலை பற்றி விசாரணை அதிகாரிகளுக்கு ஏராளமான தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. அவற்றையெல்லாம் உண்மை என்று நம்பி விடாமலும், ஒதுக்கி தள்ளி விடாமலும் நிதானமாக ஆராய்ந்து வருகிறார்கள். விசாரணை இறுதிக்கட்டத்தை நெருங்கி வருவதாகவும் எந்த நேரத்திலும் கொலையாளி பிடிபடுவான் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதி கொலையையும், கொலையாளியையும் நேரில் பார்த்த 60 க்கும் மேற்பட்டவர்களில் ஆசிரியர் தமிழ்ச்செல்வன் தைரியமாக போலீசில் ஆஜராகி கொலை தொடர்பாக சில தகவல்களை அளித்துள்ளார். அதை போலீசார் பதிவு செய்து கொண்டனர்.

போலீசில் தெரிவித்த தகவல் பற்றி தமிழ்ச்செல்வன் கூறியதாவது:-

நான் சூளைமேட்டில் வசிக்கிறேன். வண்டலூரில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் ஆசிரியராக பணிபுரிகிறேன். தினமும் நான் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இருந்து தான் காலை 6.50 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயிலில் வண்டலூர் செல்வேன்.

கடந்த வெள்ளிக்கிழமை செங்கல்பட்டு ரெயில் நிற்கும் 2-வது பிளாட்பாரத்தில் ரெயில் வருவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு தான் சென்றேன். அப்போது சுவாதி ரெயிலின் பெண்கள் பெட்டி வந்து நிற்கும் இடத்துக்கு நேராக நின்று கொண்டு இருந்தார்.

நானும் மற்ற பயணிகளும் 50 அடி தூரத்தில் மற்ற பயணிகளுடன் பொதுப்பெட்டியில் ஏறுவதற்காக காத்து இருந்தேன். கொலையுண்ட பெண் தினமும் அங்கு ரெயில் ஏற வருவதை பார்த்து இருக்கிறேன். பெண்கள் பெட்டி வந்து நிற்கும் அதே இடத்தில் தான் இருப்பார். அவர் மிடுக்கான தோற்றத்தில் உடை அணிந்து காணப்படுவாள்.

அன்று ரெயில் வருவதற்கு சற்று முன்பு கொலையாளி வந்தான். 2 நிமிடங்களில் நாங்கள் என்ன நடக்கிறது என்பதை அறிய முடியாத நிலையில் திடீர் என்று கொலையாளி அரிவாளால் வெட்டும் சத்தம் கேட்டது. என்ன நடந்தது என்று சுதாரிப்பதற்குள் நான் நின்று கொண்டிருந்த நடைமேடையில் கொலையாளி வேகமாக ஓடியதை பார்த்தேன். அவரை 2 பேர் விரட்டிக்கொண்டு ஓடினர். கல்லால் தாக்கினார்கள். ஆனால் அவன் தண்டவாளத்தில் ஓடி அடுத்த பிளாட்பாரத்தில் ஏறி தப்பிச்சென்று விட்டான்.

பிளாட்பாரத்தில் கூட்டத்தை விலக்கிப் பார்த்தால் சுவாதியின் உடல் ரத்த வெள்ளத்தில் கிடந்தது.

கொலையாளி ஓடிய போது கடற்கரை மார்க்கமாக செல்லும் ரெயில் இடையில் வந்து விட்டது. அதற்குள் அடுத்த பக்கம் சென்று விட்ட கொலையாளி சுவர் ஏறி குதித்து சூளைமேடு மார்க்கமாக தப்பிச் சென்று விட்டான்.

அதன் பிறகுதான் கொலையுண்ட பெண் சுவாதி என்று தெரியவந்தது. அவர் கொலையுண்ட 3-வது நிமிடத்தில் செங்கல்பட்டு ரெயில் வந்தது. நானும் மற்ற பயணிகளும் அதில் ஏறி வேலைக்கு சென்று விட்டோம்.

சுவாதியை நுங்கம்பாக்கம் ரெயில்நிலையத்தில் கொலை நடப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பு 6 அல்லது 7-ந்தேதி இருக்கும் நான் பார்த்து இருக்கிறேன். அப்போது இதே போல் பேக் (முதுகு பை) உடன் வந்த பையன் சுவாதியிடம் காரசாரமாக பேசினான். பின்னர் சுவாதியின் கன்னத்தில் மாறி மாறி 5,6 முறை அறைந்தான். அதில் சுவாதியின் செல்போன் கீழே விழுந்தது. அதை எடுத்துக்கொண்டு அப்போது வந்த ரெயிலில் ஏறிச் சென்று விட்டார். வாலிபர் அடித்த போது சுவாதி எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. அமைதியாக சென்றார்.

நான் போலீசில் சென்று விவரத்தை கூறியபோது போலீசார் நிறைய போட்டோக்களை காட்டி இதில் கொலையாளி இருக்கிறானா? என்று கேட்டனர். என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் சுவாதியை கன்னத்தில் அறைந்தவனை என்னால் அடையாளம் காட்ட முடியும் இவ்வாறு ஆசிரியர் தமிழரசன் கூறினார்.

அன்று சுவாதியை அறைந்த வாலிபர்தான் கொலையாளியா? என்பதை என்னால் யூகிக்க முடியவில்லை முகம் சரியாக தெரியவில்லை. சுவாதியை அறைந்த வாலிபர் கொஞ்சம் மாநிறத்தில் இருந்தார். கொலையாளி கறுப்பாக காணப்பட்டார். ஆனால் இருவருமே “பேக் ” வைத்திருந்தனர்.

கொலையுண்ட பெண் சுவாதி என்றும் சூளைமேட்டைச் சேர்ந்தவர் என்பதும் பத்திரிகை செய்தி பார்த்த பிறகுதான் தெரியும். நான் வசிக்கும் சூளைமேடு பகுதியில்தான் சுவாதி குடியிருந்தவர் என்பதை கேள்விப்பட்டபோது அதிர்ச்சியாக இருந்தது.

தமிழரசன் தகவலின் அடிப்படையில் சுவாதியை கன்னத்தில் அறைந்தவரும், கொலையாளியும் இருவேறு நபர்களாக இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

இந்த வழக்கில் சுவாதியின் குடும்பத்தினரிடம் போலீசார் மேலோட்டமாகத்தான் விசாரித்தனர். சம்பிரதாய சடங்குகள் முடிந்த பின்பே தீவிரமாக விசாரிக்க முடியும். அதற்காக காத்து இருக்கிறோம் என்று போலீசார் தெரிவித்தனர் விசாரணைக்காக 508 கேள்விகளை தயார் செய்து இருக்கிறார்கள்.

கொலை நடந்த போதே அதை கேள்விப்பட்டு 2 வாலிபர்களில் ஒருவர் சம்பவ இடம் வந்து விட்டார் அவர் தனக்கு தெரிந்த வி‌ஷயங்களை எல்லாம் அப்போதே போலீசில் சொல்லி விட்டார். இதனால் அவருக்கும் கொலைக்கும் சம்பந்தம் இல்லை என்று போலீஸ் முடிவுக்கு வந்து விட்டது.

சுவாதியின் குடும்பத்தினரிடம் விசாரித்த பிறகு தான் மற்றொரு வாலிபர் யார் என்று தெரிய வரும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகிலேயே அதிக எடையுள்ள 10 வயது இந்தோனேசிய சிறுவன்
Next post இந்த பழக்கவழக்கங்கள் தான் சர்க்கரை நோயை உண்டாக்குகிறது என்பது தெரியுமா?