சீனாவிலுள்ள கண்ணாடிப் பாலத்தின் வலிமையை நிரூபிப்பதற்காக சம்மட்டிகளால் அடித்து, வாகனத்தையும் செலுத்திக் காண்பித்த அதிகாரிகள்…!!

Read Time:2 Minute, 41 Second

17666g1சீனாவின் ஹுனான் மாகா­ணத்தில் இரு மலைச்­சி­க­ரங்­களை இணைக்கும் வகையில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள கண்­ணாடிப் பாலத்தில் நடந்து செல்ல பலர் அஞ்­சு­கின்­றனர்.

இந்­நி­லையில் பாலத்தின் உறுதித் தன்­மையை நிரூ­பிப்­ப­தற்­காக அக்­ கண்­ணாடி மீது பாரிய சம்­மட்­டியால் அடித்து, அதன்பின் அக் ­கண்­ணா­டியினூடாக கார் ஒன்றை செலுத்­திக்­ காட்­டி­யுள்­ளனர் அதி­கா­ரிகள்.

ஸாங்­ஜி­யாஜி தேசிய பூங்காவில் உல்­லாசப் பய­ணி­களை கவர்­வ­தற்­காக நிர்­மா­ணிக்­கப்­பட்ட இப்­ பாலம் தரை­யி­லி­ருந்து 300 மீற்றர் (984 அடி) உய­ரத்தில் உள்­ளது.

இவ்­வ­ளவு உய­ரத்தில் கண்­ணாடி மீது நடந்து செல்­வது என்­பது பல­ருக்கு நினைத் துப் பார்க்­கவே தலை­சுற்ற வைக்க விடயம்.

430 மீற்றர் நீள­மான இப் ­பா­லத்தில் நடந்து சென்­று­கொண்­டி­ருக்கும்போது திடீ­ரென கீழே பார்த்து அச்­ச­ம­டைந்து அழுது புலம்­பி­ய­வர்­களும் உள்­ளனர்.

இந்­நி­லையில் இப் ­பா­லத்­தி­லுள்ள கண்­ணாடி சாதா­ரண கண்­ணாடி போன்று உடைந்­து­விடக் கூடி­ய­தல்ல என்­பதை நிரூ­பிப்­ப­தற்­காக சோதனை நிகழ்­வொ ன்றை நடத்த அதி­கா­ரிகள் தீர்­மா­னித்­தனர்.

கடந்த சனிக்­கி­ழமை நடை­பெற்ற இச்­ சோ­தனை நிகழ்வில் 20 தொண்­டர்கள் பங்­கு ­பற்­றினர். இதன்­போது, பாரிய சம்­மட்­டி­யினால் கண்­ணாடி மீது அடிக்­கு­மாறு தொண்­டர்கள் கோரப்­பட்­டனர்.

இதனால் கண்­ணா­டியில் கீறல்கள் ஏற்­பட்­ட­போ­திலும் எவ­ரா­லுமே கண்­ணாடியை முற்­றாக உடைக்க முடி­ய­வில்லை. அதன்பின் பார­மான வாக­ன­மொன்றும் அக்­ கண்­ணாடி மீது செலுத்­தப்­பட்­டது.

அப்­போதும் அக் ­கண்­ணாடி உடை­ய­வில்லை. அதன்பின் அக்­ கண்­ணாடி மீது தொண்­டர்கள் நடந்து சென்றனர். இக் கண்ணாடி 5 சென்ரிமீற்றர் தடிப்பு கொண் டவை என இப் பாலத்தின் பிரதம பொறியியலாளரான மா லியாங் மேற்படி சோத னைக்கு முன்னர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொழிஞ்சாம்பாறை அருகே இளம்பெண் வீட்டில் தங்கியிருந்த வாலிபரை அடித்து கொன்ற உறவினர்கள்…!!
Next post அண்ணியின் வாயை வெட்ட சதித்திட்டம் தீட்டிய தம்பி கைது…!!