தொலைக்காட்சி ரியோலிட்டி ஷோவில் பாலியலில் ஈடுபட்டதால் ‘மிஸ் கிரேட் பிரிட்டன்’ அழகுராணி பட்டத்தை பறிகொடுத்த யுவதி..!!
தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ ஒன்றில் பாலியல் நடவடிக்கை யில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பிரித்தானிய அழகுராணி யின் பட்டம் பறிக்கப்பட்டுள்ளது.
‘மிஸ் கிரேட் பிரிட்டன்’ அழகுராணியாக விளங்கிய ஸாரா ஹொல ண்ட் எனும் யுவதியே இவ்வாறு அழகுராணி பட்டத்தை பறிகொடுத் துள்ளார்.
கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற மிஸ் கிரேட் பிரிட்டன் அழகுராணி போட்டியில் முதலிடம் பெற்று மிஸ் கிரேட் பிரிட்டன் 2015 – 16 அழகுராணியாக தெரிவானார் ஸாரா ஹொலன்ட்.
இவர் பிரிட்டனின் ஐ.ரி.வி.யில் ஒளிபரப்பாகும் ‘லவ் ஐலண்ட்’ எனும் ரியாலிட்டி ஷோ ஒன்றில் பங்குபற்றினார். திருமணமாகாத அல்லது துணையை பிரிந்து சிங்கிளாக உள்ள ஆண்களும் பெண்களும் ஜோடி சேர்ந்து சவால்களை எதிர் கொள்ளும் ஷோ இது.
இவ் வருட லவ் ஐலண்ட் நிகழ்ச்சியில் அழகுராணி ஸாரா ஹொலண் ட்டும் பங்குபற்றினார். இதில் 24 வயதான ஆண் மொடல் நட்சத்திர மான அலெக்ஸ் போவனுடன் ஜோடி சேர்ந்தார் ஸாரா.
இதன்போது அலெக்ஸ் போவனும் சாரா ஹொலண்டும் பாலியல் நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.
மில்லியன் கணக்கானோர் பார்வையிடும் இந்த ரியாலிட்டி ஷோவில் மேற்படி பாலியல் காட்சி அதிகம் ஒளிபரப்பாகவில்லை. எனினும் அங்கு என்ன நடந்தது என்பது மறுநாள் இவர்கள் பங்குபற்றிய நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட கருத்துக் கள் மூலம் தெரிய வந்தது.
இதையடுத்து ஸாரா ஹொலண்ட்டின் அழகுராணி பட்டத்தை பறிப்பதாக மிஸ் கிரேட் பிரிட்டன் அழகுராணி போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்து ள்ளனர்.
இதுதொடர்பாக , மிஸ் கிரேட் பிரிட்டன் போட்டி ஏற்பாட்டாளர்கள் தமது சமூக வலைத்தளப் பக்கங்களில் தெரிவிக்கையில், ‘எமது தற்போதைய வெற்றியாளர் ஸாரா ஹொலண்ட் சம்பந்தப்பட்ட லவ் ஐலண்ட் தொடரின் அத்தியாயத்தில் வெளிப்படுத்தப்பட்ட நடத்தைகள் குறித்து நாம் அறிந்திருக்கிறோம்.
எமது வெற்றியாளர்கள் இத்தகைய நடவடிக்கைகளில் பங்குபற்ற வேண்டா மென அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எனினும் ஸாரா 20 வயதானவர். அவரின் நடத்தைகள் எமது அமைப்பினால் கட்டுப்படுத்தப்பட்டவை அல்ல’ எனக் குறிப்பிட்டிருந்தனர்.
அதன்பின் ஸாரா ஹொலன்டின் அழகுராணி கிரீடம் பறிக்கப்படுவதாகவும் மேற்படி போட்டியில் இரண்டாமிடம் பெற்றிருந்த டியோன் ரொபர்ட்ஸன் புதிய மிஸ் கிரேட் பிரிட்டன் 2015 – 16 அழகுராணியாக தெரிவாகியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
‘அனைவரும் தவறு செய்வார்கள் என்பதை நாம் உணர்ந்துள்ளோம். எனினும், மிஸ் கிரேட் பிரிட்டன் தூதுவரான ஸாரா, இந்த அழகுராணி பட்டத்துக்குரியவரி டமிருந்து எதிர்பார்க் கப்படும் பொறுப்புகளை நிலைநிறுத்தவில்லை’ என இப் போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித் துள்ளனர்.
புதிய மிஸ் கிரேட் பிரிட்டன் 2015 – 16 அழகுராணியான டியோன் ரொபர்ட்ஸன் கருத்துத் தெரிவிக்கையில், ஸாரா ஹொலண்ட் நீண்டகாலமாக அழகுராணி போட்டிகளில் பங்குபற்றி வந்தவர்.
அவருக்கு போட்டி விதிமுறைகள் அனைத்தும் தெரிந்திருக்கும். விதிமுறைகளை பின்பற்றுவது அவசியம். நாம் இளம் பெண்களுக்கு ரோல் மொடல்களாக விளங்க வேண்டியவர்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.
Average Rating