சர்வதேச மன்னிப்பு சபையை சாடுகிறது ஈ.பி.டி.பி

Read Time:2 Minute, 40 Second

Dak.D-.JPG தமது அமைப்பு பற்றி சர்வதேச மன்னிப்பு சபை வெளியிட்டிருக்கும் செய்தி தவறானதென்றும், யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் 13பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கடற்படையுடன் ஈ.பி.டி.பி ஆயுதபாணிகள் இருந்ததாக சர்வதேச மன்னிப்பு சபையின் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதை முற்றாக மறுப்பதாகவும் ஈ.பி.டி.பி அமைப்பு தெரிவித்துள்ளது.

தமது கட்சியினர் ஜனநாயக வழிமுறைகளை கடைப்பிடித்து செயற்பட்டு வருவதாகவும், கள நிலைகளை அறிந்து கொள்ளாத சர்வதேச மன்னிப்பு சபை தமது முகவர்கள் கொடுக்கும் செய்திகளை வைத்துக் கொண்டு இவ்வாறானதொரு முடிவொன்றுக்கு வந்திருப்பது கண்டிக்க வேண்டிய விடயமென்றும் ஈ.பி.டி.பி அமைப்பின் செயலாளரும், அமைச்சருமான திரு.டக்ளஸ் தேவாநந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். தாங்களே கொலைகளை செய்யும் புலிகள் அதன்பழியை மற்றையோர்மீது போடும் நிலையில் சர்வதேச மன்னிப்பு சபை இவ்வாறானதோர் அறிக்கையை விடுத்திருப்பது உண்மையான கொலைஞர்களை தப்பிப்பதற்கே வழிவகுத்து விடும் என்றும் அவா மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி படுகொலைகளுடன் தொடர்புடைய உண்மையான கொலையாளிகளை கண்டு பிடிக்க சர்வதேச மன்னிப்புச்சபை முன்வர வேண்டும். அதற்கு பக்கபலமாக நின்று உழைக்க ஈ.பி.டி.பி. தயாராக இருக்கின்றதென ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார். படுகொலைச் சம்பவம் தொடர்பாக சர்வதேச மன்னிப்புசபைக்கு விரிவான கடிதமொன்றை அனுப்பியுள்ள அமைச்சர் தேவானந்தா, தீவக மக்கள் மீதான படுகொலை குறித்த சர்வதேச மன்னிப்புசபையின் ஆதாரமற்ற அறிக்கைக்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். Thanks…-www.athirady.com

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வவுனியாவில் வர்த்தக நிலையம் மீது கைக்குண்டுத் தாக்குதல் கதவடைக்காததே காரணம்
Next post இலங்கைத் தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப் புலிகள் அல்லர். தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பு பட்டியலில் சேர்ப்பது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறோம் என்று ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.