கொழும்பில் கழிவகற்ற 80 இலட்சம் ரூபா…!!

Read Time:1 Minute, 21 Second

918660437Untitled-1வௌ்ள நிலைமை காரணமாக கொழும்பு மாவட்டத்தில் தேங்கிய கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகளுக்காக, 80 இலட்சம் ரூபா வரை செலவாகும் என, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த அமைச்சின் தலைமையில் கழிவகற்றும் நடவடிக்கைகள் கடந்த 31ம் திகதி முதல் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, இதுவரை 7500 தொன் கழிவுகள் இவ்வாறு அகற்றப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி மன்றங்களுக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களுக்கு அமைய, வௌ்ள நிலைமையின் பின்னர் கழிவுகளை சேகரிக்கும் பகுதிகளை அடையாளம் கண்டு, அவற்றை அகற்றும் வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

முப்படையினர், பொலிஸார், சிவில் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் மாகாண சபை அதிகாரிகள் இந்த நடவடிக்கைகளில் பங்கேற்றதாகவும் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வவுனியாவில் காணாமல் போன 17 வயது மாணவி மீட்பு..!!
Next post 2 சூரியன்களுடன் வியாழன் போன்று புதிய கிரகம்: நாசா மையம் கண்டுபிடிப்பு…!!