சீனாவில் காதலர் தினம்

Read Time:1 Minute, 0 Second

LoversDay.jpgமேற்கத்திய நாடுகளில் பிப்ரவரி 14-ந்தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. சீனாவில் அவர்கள் நாட்டு காலண்டர்படி 7-வது மாதம் 7-ந்தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனால் இதை இரட்டை 7 தினம் என்றும் கூறுவது உண்டு. இந்த தினத்துக்கு அவர்கள் மொழியில் குய் ஷி என்று பெயர். இன்றைய தினத்தில் காதலிக்கு காதலர்கள் பூக்களை பரிசளிப்பது வழக்கம்.

இதனால் நேற்று பூ வியாபாரம் 30 சதவீதம் அதிகரித்தது. தேவை அதிகரித்ததால் விலையும் அதிகரித்தது. ரோஜாப்பூ விலை 50 சதவீதம் அதிகமாக இருந்தது.
இந்த தினத்தில் திருமணம் நடந்தால் நல்லது என்ற எண்ணம் நிலவுவதால் நேற்று திருமணங்கள் அதிகஅளவில் நடந்தன.

LoversDay.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பஸ் தகர்ப்பு- ராணுவ வீரர்கள் 18 பேர் சாவு
Next post இஸ்ரேலுக்கு எதிராக சிரியாவும் போரில் குதிக்கிறது