கோபத்தில் கொந்தளிக்கும் மனைவியரின் மூட் சேன்ஜ் பண்ண சில கூலான ஐடியாக்கள்…!!

Read Time:3 Minute, 39 Second

14-1465898272-4howtodealwithanangryindianwifeஇப்படியொரு சம்பவம் நடக்காத இல்லறம், இல்லறமாகவே இருக்க முடியாது. எரிமலை தினமும் வெடிக்காது, ஆனால் வெடிக்கும் போது அதன் பாதிப்பு மிகப்பெரியதாக இருக்கும். ஆண்களின் கோபம் புகையை போல, பெண்களின் கோபம் எரிமலையை போல.

எரிமலை முன்னர் எதிர்த்து நிற்பது, கண்டிப்பாக எதிர்த்து நிற்பவருக்கு தான் பாதிப்பை உண்டாக்கும். உங்கள் மனைவி ஒருவேளை பத்திரகாளியாக மாறி கோபத்தின் உச்சிக்கு சென்றால், நீங்களும் கோபப்பட்டுவிட வேண்டாம். இது சத்தியமாக ஓர் நல்ல முடிவை அளிக்காது.

முதலில் உங்கள் மனைவியின் கோபத்தை எப்படி தணிப்பது என்று யோசியுங்கள். ஒருவேளை உங்கள் மனைவி கோபப்படுவது அர்த்தமற்று இருக்கிறது எனில், உடனே பதில் அளிக்காமல், சற்று நேரம் கழித்து அவர்கள் அமைதியான பிறகு மென்மையாக கூறி புரியவையுங்கள்.

ஐடியா # 1

உங்கள் மனைவி கோபப்படும் போது, ஆண் என்ற முனைப்போடு நீங்களும், அதிகமாக பேச வேண்டாம். என்ன கூறினால் உங்கள் மனைவி உருகுவார் என அறிந்து அந்த சூழலுக்கு ஏற்ப பேச்சை மாற்ற பாருங்கள். அவருக்கு பிடித்தமான செயல்கள் நீங்கள் செய்ததை எடுத்துக் கூறி, சண்டையின் போக்கை வேறுவழிக்கு மாற்றிவிடுங்கள்.

ஐடியா # 2

எக்காரணம் கொண்டும் நீங்கள் செய்த செயலுக்கு காரணம் சொல்ல வேண்டாம். ஆண்கள் காரணம் சொல்ல, சொல்ல தான் பெண்களுக்கு கோபம் அதிகமாகும்.

ஐடியா # 3

முக்கியமாக நீங்கள் அவரது கோபம் நியாமற்றது என நிரூபிக்க முயற்சி செய்ய வேண்டாம், பிறகு அணை உடைந்து வெள்ளம் வெளியானால் தடுக்க முடியாது.

ஐடியா # 4

தவறு யார் பக்கம் இருந்தாலும் சரி, மனைவி மிகுதியான கோபத்தை வெளிப்படுத்தும் போது, உங்களுக்கும் கோபம் வரும், நீங்கள் எதிர்த்து பேசலாம். ஆனால், அந்த நேரத்தில் கெட்டவார்த்தைகள் பயன்படுத்தி திட்டிவிட வேண்டாம். இது அவர்களை மிகவும் பாதிக்கும்.

ஐடியா # 5

அவர்கள் பேச, பேச அதை கேட்காமல், நீங்கள் உங்கள் வேலையை பார்த்து கொண்டிருக்க வேண்டாம். நாம் கோபப்படுவதை கூட கவனிக்காமல் இருக்கிறார் என்பது பெண்களின் கோபத்தில் பெட்ரோல் ஊற்றுவது போல, கொழுந்துவிட்டு எரியும்.

ஐடியா # 6

சில சமயங்களில் பெண்கள் கோபப்படுவதே தன் மீது யாரும் சரியாக அக்கறை எடுத்துக் கொள்வதில்லை என்பதால் தான். எனவே, உங்கள் மனைவி மறைமுகமாக வெளிப்படுத்தும் எண்ணம் என்ன என்பதை புரிந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். அவர்களது கோபம் தானாக சரியாகிவிடும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்தில் – 8 மாதக் குழந்தை உட்பட இருவர் பலி..!!
Next post பெண்களை விட ஆண்களை மட்டுமே அதிகம் தாக்கும் 7 நோய்கள்…!!