பணம் கேட்டு கொடுக்க மறுத்த தந்தையை எரித்து துண்டு துண்டாக வெட்டிய மகன்..!!
பணம் கேட்டு கொடுக்காததாலும் தந்தை மீது ஏற்பட்ட வெறுப்பாலும் பெற்ற மகனே, தந்தையை சுட்டுக்கொன்று எரித்து, உடலை துண்டு துண்டாக வெட்டி வீசிய சம்பவமொன்று கேரளமாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம் செங்கனுார் பகுதியைச் சேர்ந்தவர் ஜோன், 63. தொழிலதிபரான இவர், சில காலம் அமெரிக்காவில் வசித்துள்ளார்.
இவரது மகன் ஷெரின் 31.சில தினங்களுக்கு முன், இருவரும் காணாமல் போயுள்ளனர்.
இதனால் பதற்றமடைந்த ஜோனின் மனைவி பொலிஸ் நிலையத்தில் கணவன் மற்றும் மகன் மாயமானது குறித்து முறைப்பாடு அளித்துள்ளார்.
மாரியம்மாள் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், பொலிஸார் இருவரையும் தேடி வந்தனர். செங்கனுாரில், மகன் ஷெரினை, தனிப்படை பொலிஸார் கண்டுபிடித்தனர். பின்னர் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது ‘எதுவுமே தெரியாது’ என, அவர் கூறியுள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த பொலிஸார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் , ‘பணம் கொடுக்காத ஆத்திரத்தில், தந்தையை கொலை செய்தேன்’ என, ஷெரின் கடந்த திங்கட் கிழமை ஒப்புக்கொண்டுள்ளார்.
இது குறித்து பொலிஸாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பதாவது, மே, 25ஆம் திகதி தந்தை ஜோனுடன் காரில் திருவனந்தபுரம் சென்று, வாடகை பணம் ஒரு இலட்சம் ரூபாயை வசூல் செய்து விட்டு வீடு திரும்பிக் கொண்டு இருந்தோம்.
அப்போது, பணம் தரும்படி தந்தையிடம் நான் கேட்டேன். ஆனால், அவர் பணம் தரவில்லை. இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது நான் எடுத்துச் சென்ற துப்பாக்கியால், அவரை நோக்கி சுட்டேன் தந்தை இரத்த வெள்ளத்தில் காருக்குள் சாய்ந்தார்.
பின், காரை ஓட்டிச் சென்றேன். ஆள் இல்லாத இடத்தில், தந்தையின் உடலை எரித்தேன். ஆனால், முழுமையாக எரியவில்லை. பின், ஆறு துண்டுகளாக அவரது உடலை வெட்டி, வெவ்வேறு பகுதிகளில் வீசினேன் என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, தந்தையின் உடல் பாகங்களை தேடி எடுப்பதற்காக, ஷெரினையும் அழைத்துக் கொண்டு பொலிஸார் சென்றனர். அவர் காட்டிய இடங்களிலிருந்து, உடல் பாகங்கள் மீட்கப்பட்டன.
ஷெரினை கைது செய்த பொலிஸார் சிறையில் அடைதஸார் ஜோனின் உடல், பிரேத பரிசோதனைக்கு பின், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனிடையே ஆலப்புழாவில், பம்பையாற்றில் குளித்துக் கொண்டு இருந்த சிலர், கை ஒன்று மிதந்து வருவதை பார்த்து பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர் அந்தக் கையையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதனையடுத்தே பொலிஸார் சந்தேகம் அடைந்து, ஷெரினிடம் கடுமையான முறையில் விசாரணை நடத்தியுள்ளனர். ஷெரினை அழைத்துச் சென்று, ஜோனின் கருகிய உடல், தலை போன்ற உடல் பாகங்களை வெவ்வேறு இடங்களிலிருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.
என் தந்தை, சிறுவயதில் இருந்தே, பாசத்தை விட, பணத்தின் மீதே ஆர்வம் காட்டினார். இதனால் தந்தை மீது வெறுப்பு என மகன் ஷெரின் வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.
Average Rating