சிறுமிகளை கடத்தினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை: புதிய சட்டம் வருகிறது..!!

Read Time:2 Minute, 55 Second

timthumbஇந்தியாவில் சிறுமிகளை கடத்துவது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தப்படி உள்ளது.

அதைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றாலும் சிறுமிகள் கடத்தப்படுவது குறையவில்லை.

கடத்திச் செல்லப்படும் சிறுமிகளுக்கு ஹார்மோன் மாற்றத்துக்கான ஊசிப் போட்டு, அவர்களை பெரியவர்களாகக் காட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் கொடூரம் நடப்பதாக ஏராளமான புகார்கள் வந்தபடி உள்ளது.

இதையடுத்து புதிய சட்டம் மூலம் சிறுமிகள் கடத்தல் காரர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

அதன்பேரில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் மேனகா காந்தி புதிய சட்ட முன்வடிவை கொண்டு வந்துள்ளார். அதில் சிறுமிகளை கடத்துபவர்களுக்கு எத்தகைய தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்று வரையறுத்துள்ளார்.

புதிய சட்டத்தின்படி, சிறுமிகளை கடத்தி செல்பவர்களுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சிறுமிகளுக்கு ஹார் மோன் ஊசிபோட்டு அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துபவர்களுக்கும் 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்க அந்த புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும் கடத்தப்படும் சிறுமிகள் அதிக பாதிப்பின்றி மீட்கப்படும் நடவடிக்கைகளுக்கும் புதிய சட்டம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய சட்டப்படி கடத்தலுக்குள்ளாகும் சிறுமியும் ஜெயிலுக்கு செல்லும் நிலை உள்ளது. ஆனால், புதிய சட்டத்தின்படி பறிக்கப்படும் சிறுமிகள் ஜெயிலுக்கு அனுப்பப்படமாட்டார்கள்.

மாறாக அவர்களுக்கு உரிய கவுன்சிலிங் வழங்கப்படும். மேலும் அவர்களுக்காக மாநில அரசுகள் மறுவாழ்வு நிதி அமைத்து உதவிகள் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாதிரி வரைவு சட்டம் மத்திய மந்திரிசபை ஒப்புதல் கொடுத்த பிறகு அமலுக்கு வரும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தோல் புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு..!!
Next post சொத்துக்காக தந்தையை கொன்று உடலை துண்டுகளாக்கி பல இடங்களில் வீசிய சாப்ட்வேர் என்ஜினியர்..!!