வான் வழித் தாக்குதல்களை 48 மணி நேரத்திற்கு நிறுத்தி வைப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது

Read Time:3 Minute, 54 Second

Israel.flag1.jpgதெற்கு லெபனானில் க்வானா என்ற கிராமம் மீது இஸ்ரேல் விமானப் படை நடத்திய கொடூரத் தாக்குதலில்34 குழந்தைகள் உள்பட54 பேர் பலியானதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. போர் காரணமாக முகாமில் தங்கியிருந்த அப்பாவிகள் மீது ஞாயிற்றுக்கிழமை இந்த கொடூரமான தாக்குதலை இஸ்ரேல் நடத்தியது. இதற்கு லெபனான் பிரதமர் பெஃளத் சினியோரியா இஸ்ரேலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், இப்படிப்பட்ட சூழ்நிலையில் பேச்சுவார்த்தை என்ற பேச்சையே எடுக்க முடியாது. உடனடியாக, நிபந்தனையற்ற போர் நிறுத்தத்தை மேற்கொள்ள இஸ்ரேலை உலக நாடுகள் கடுமையாக வலியுறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் படுகொலைகள் குறித்து உலக நாடுகள் விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

இஸ்ரேலுக்கு பிரான்ஸ், ஸ்பெயின், ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இஸ்ரேலை கண்டிக்க பிரான்ஸ் நேற்று ஐ.நா. பாதுகாப்பு சபையில் தீர்மானம் கொண்டு வந்தது. அதன் மீது உரையாற்றிய ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னான், இஸ்ரேலை உலக நாடுகள் கடுமையாக கண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

க்வானா சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும், உடனடியாக இஸ்ரேல்போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்றும் ஐ.நா. பாதுகாப்பு சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

முன்னதாக பெய்ரூட் நகருக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காண்டலீசா ரைஸ் வருவதாக இருந்தது. ஆனால் அவரது வருகையால் எந்தப் பயனும் இருக்கப் போவதில்லை. போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டால் மட்டுமே இனிமேல் யாருடனும் பேச நாங்கள் தயாராக இருக்கிறோம் என சினியோரியா கூறி விட்டதால் ரைஸ்தனது பெய்ரூட் பயணத்தை ரத்து செய்துவிட்டார்.

க்வான படுகொலைகளுக்கு ஹிஸ்புல்லா இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, இதற்கு சரியான பதிலடி கொடுக்கப் போவதாகவும் எச்சரித்துள்ளது. இஸ்ரேலுக்கு கடுமையான பதில் தராமல் ஓய மாட்டோம் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக நாடுகளின் கடும் கண்டனம் காரணமாக தெற்கு லெபனான் மீதான தனது வான் வழித் தாக்குதல்களை 48 மணி நேரத்திற்கு நிறுத்தி வைப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. அதற்குள் பொது மக்கள் அனைவரும் வெளியேறி விட வேண்டும் என்றும் இஸ்ரேல் கூறியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் இது அமலுக்கு வந்துள்ளது.

இருப்பினும் தரைவழித்தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்துமேற்கொளளும் என தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நடிகர் சங்க தேர்தல்: சரத் அணிக்கு வெற்றி
Next post குழந்தைகளை கொன்று குவித்த இஸ்ரேலுக்கு உலக நாடுகள் கண்டனம்!