திருவேங்கடம் அருகே பெண் போலீசின் கணவர் தீக்குளித்து சாவு: காப்பாற்ற முயன்ற நண்பரும் பலி..!!

Read Time:2 Minute, 38 Second

201605251330576175_woman-police-husband-died-Killed-trying-to-save-a-friend_SECVPFதிருவேங்கடம் அருகே உள்ள சங்குபட்டியை சேர்ந்தவர் முத்துசாமி மகன் காசிராஜ் (வயது 31). இவர் சென்னையில் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரின் மனைவி விஜயராணி சென்னையில் ஆயுதப்படை போலீசாக பணியாற்றி வருகிறார். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

காசிராஜ் தான் வாங்கிய ஆட்டோவிற்கு சரியாக பணம் கட்டவில்லை என கூறப்படுகிறது. மேலும் அவருக்கு குடிப்பழக்கமும் இருந்துள்ளது. பணம் கட்டாததால் ஆட்டோவை கம்பெனிகாரர்கள் எடுத்து சென்று விட்டார்களாம்.

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த காசிராஜ் சொந்த ஊரான திருவேங்கடம் அருகே உள்ள சங்குபட்டிக்கு வந்துள்ளார். அங்கு காசிராஜூம், அவரது நண்பர் துரைப்பாண்டியும் மது குடித்துள்ளனர். அப்போது, தான் தற்கொலை செய்யப்போவதாக காசிராஜ் கூறியுள்ளார். அவரை துரைராஜ் சமாதானப்படுத்தி பேசினார்.

ஆனால் அதற்குள் காசிராஜ் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து தன் மீது ஊற்றி தீவைத்து கொண்டாராம். அவரை காப்பாற்ற சென்ற நண்பர் துரைபாண்டியும் இதில் பலத்த தீக்காயம் அடைந்தார். அவர்கள் இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காசிராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு ஆபாத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த துரைப்பாண்டியும் நேற்று இரவு இறந்தார். சம்பவம் குறித்து திருவேங்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண்போலீசின் கணவர் தீக்குளித்து தற்கொலை செய்ததும், அவரை காப்பாற்ற சென்ற நண்பர் இறந்ததும் திருவேங்கடம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருச்சி அருகே நிலத்தகராறில் தனியார் நிறுவன ஊழியர் கொலை..!!
Next post முகத்தில் புற்றுநோய் கட்டியுடன் அவதிபடும் 4 வயது சிறுவன்: பெற்றோர் கண்ணீர்..!!