ஜேர்மனியில் தலைவிரித்தாடும் வன்முறை…!!

Read Time:2 Minute, 1 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (4)ஜேர்மனியில் அரசியல் வன்முறை மற்றும் அகதிகளுக்கு எதிரான தாக்குதல் அதிகரித்துள்ளதாக உள்துறை அமைச்சகம் புள்ளிவிபரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

நாட்டில் நடைபெறும் குற்றங்கள் தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2015 ஆம் ஆண்டு அரசியல் நோக்கம் கருதி நடைபெற்ற குற்றங்களின் எண்ணிக்கை 39,000 ஆகும்.

இது கடந்த 2014 ஆம் ஆண்டை விட34.9 சதவீதமாக அதிகரித்துள்ளது, கடந்த ஆண்டு 19 சதவீதமாக இருந்தது.

ஜேர்மனியில் நடைபெறும் குற்றங்கள் வேறுபடுத்தப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன, அரசியல் உள்நோக்கத்துக்காகவும், வெறுப்புணர்வால் செய்யப்படும் கொலைகளின் எண்ணிக்கை மிகப் பெரியளவில் உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளது.

2015 ஆம் ஆண்டில் 4,4000 வன்முறை அரசியல் குற்றங்கள் நடந்துள்ளன, இது கடந்த ஆண்டை விட 30 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

இதில், அகதிகளின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் எண்ணிக்கையும் அதிரித்துள்ளது, 2014 ஆம் ஆண்டு 199 குற்றங்கள் பதிவாகியிருந்தது, இது 2015 ஆம் ஆண்டில் 1,031 ஆக உயர்ந்துள்ளது.

இந்த குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் ஆவார்.

இந்த 2016 ஆம் ஆண்டு ஆரம்பித்து முதல் 3 மாதங்களில் மட்டும் அகதிகள் வசிக்கும் வீடுகளின் மீதான தாக்குதலின் எண்ணிக்கை 350 ஆக பதிவாகியுள்ளது என தெரியவந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொலிஸ் நிலையத்தில் பெண்ணை அடித்து உதைத்து நிர்வாணமாக்கிய அதிகாரிகள்…!!
Next post டிராவல்ஸ் அதிபர் சுட்டுக் கொலை: முக்கிய குற்றவாளிகள் 2 பேர் புனேயில் கைது…!!