தனித்துவம் வாய்ந்த மருந்து இறக்குமதியாளர்களால் புற்றுநோயாளர் அவதி…!!

Read Time:3 Minute, 24 Second

medicine2_505_072013100535இலங்கைக்கு புற்றுநோய் மருந்துகள் மற்றும் ஊசிகள் இறக்குமதி செய்யும் இலங்கையின் மிகப் பிரபலமான நிறுவனமொன்றினால் குறித்த மருந்துக்கான தனித்துவம் காரணமாக அதன் விலையை குறைக்க முடியாது போகும் நிலை தோன்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு மிக நெருங்கிய சம்பவமாக கருதப்படுவது,

அண்மையில் அரச தலையீட்டின் மத்தியில் தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையில் பதிவு செய்வதற்காக விண்ணப்பமொன்றை கையளித்து அந்த விண்ணப்பத்தின்படி ராகம வைத்தியசாலையின் பேராசிரியர் ஒருவரின் சிபாரின் பேரில் புற்றுநோய்க்கான மருந்தொன்றை ரஸ்யாவிலிருந்து வரவழைப்பதற்கு அனுமதி பெற்றுள்ளமையே என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு ரஸ்யாவில் உற்பத்தி செய்யப்படும் ‘Trastuzumab’ எனும் தடுப்பூசியொன்றே மேற்படி இறக்குமதி செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்த தடுப்பூசியின் சிறு தொகையை சுகாதார அமைச்சின் வைத்திய விநியோகப் பிரிவினால் தேசிய ரீதியில் கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டிருந்தது.

குறித்த தடுப்பூசியானது நம் நாட்டின் தனித்துவம் வாய்ந்த மருந்து நிறுவனத்தாரின் விலையை விட ரூபா 23,000 குறைவு எனவும் கூறப்படுகிறது.

இந்த தடுப்பூசியை இறக்குமதி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த தனியார் நிறுவனம் வழக்கு தொடுத்து அனுமதி மறுப்பு அறிக்கையொன்றை பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.

குறித்த வழக்கில் தனியார் நிறுவனம் சார்பில் புற்றுநோய் விசேட வைத்தியர்களின் சங்கமொன்றின் உத்தியோகபூர்வமற்ற நிறுவனமொன்று ஆஜராகியதாகவும் கூறப்படுகிறது.

மேற்படி சங்கமானது குறித்த வழக்கு விசாரணைகளின்போது ஆஜராகியது அச்சங்கத்தின் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு குறித்த தனியார் நிறுவனம் பணம் வழங்குவதாலேயே என தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி சம்பவமானது மருந்துகளின் தனித்துவத்தை சிதறடித்துள்ளதாகவும் மருந்துகளின் கொள்கை முறைகளை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதனால் புற்று நோயாளர்கள் அவதியுறும் நிலை தோன்றியுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழில் பாடசாலை மாணவர்கள் இருவர் கைது…!!
Next post விக்டோரியா மகாராணி பிறந்த தினம்: மே 24- 1819..!!