கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்: 14 ஆண்டுகளுக்குப் பிறகு முக்கிய குற்றவாளி பரூக் பானா கைது..!!

Read Time:2 Minute, 37 Second

201605181551401840_Godhra-carnage-Key-accused-held-by-ATS-after-14-years_SECVPFகுஜராத்தில் சபர்மதி ரயில் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டுவந்த பரூக் பானா என்பவரை 14 ஆண்டுகளுக்கு பிறகு தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

குஜராத்தில் சபர்மதி ரயில் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டுவந்த பரூக் பானா என்பவரை 14 ஆண்டுகளுக்கு பிறகு தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் இருந்து 2002 ஆம் ஆண்டு சபர்மதி ரெயில் மூலமாக கரசேவகர்கள் வந்து கொண்டிருந்த போது, ரயிலின் ஒரு குறிப்பிட்ட பெட்டியை ஒருகும்பல் தீ வைத்து எரித்தது. இந்த சம்பவத்தில் 59 பேர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தில் 1200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். சபர்மதி ரயிலுக்கு தீ வைப்பதற்கு முன் நகர கவுன்சிலராக இருந்த பரூக் பானா, தனது இல்லத்தில் 20 பேருடன் ஆலோசனை நடத்தியதாகவும், இந்த ஆலோசனையில் ரயில் மீது தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டப்பட்டதாகவும் பரூக் பானா மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

போலீசார் விசாரணை வளையத்துக்குள் தன் பெயர் சிக்கியதில் இருந்து தப்பி ஓடி தலைமறைவாக இருந்து வந்த பரூக் பானா, இன்று குஜராத்தின் மத்திய பகுதியான நகா என்ற இடத்தில் தீவிரவாத தடுப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தில் இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவு பட்டியலில் இருந்துவந்த 6 பேரில் தற்போது கைது செய்யப்பட்ட பரூக் பானாவும் ஒருவராவார். அவரிடம் ரகசிய இடத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காரைக்குடி அருகே தொழிலாளி தற்கொலை…!!
Next post 5 மாத கர்ப்பிணி பெண்ணை சுட்டுக் கொன்றது யார்? பொலிசார் தீவிர விசாரணை…!!