அதிக மழை காரணமாக 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை..!!

Read Time:1 Minute, 50 Second

downloadஅதிக மழை காரணமாக 8 மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

கண்டி,இரத்தினபுரி,குருணாகலை,கேகாலை,மொனராகலை,பதுளை நுவரெலியா மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் மண்சரிவு அபாய முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் ஆர் எம் எஸ் பண்டார கூறினார்

பதுளை மாவட்டத்தில், லுணுகல, பசறை, பதுளை, ஹாலிஎல, பண்டாரவளை, வெளிமடை, எல்ல, ஹப்புதளை, ஹல்தமுல்லை, சொரனாத்தோட்டை, ஊவா பரணமகம ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஆர்.எம்.எஸ் பண்டார கூறியுள்ளார்.

இதேவேளை, மொனராகலை மாவட்டத்தின் படல்கும்புர பிரதேச செயலக பிரிவிற்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பலத்த மழைக் காரணமாக மண்மேடு சரிந்து விழுதல் மற்றும் கற்பாறைகள் சரிவு ஏற்படக்கூடும் எனவும் தேசிய கட்டட ஆய்வு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

எனவே இந்த மாவட்டங்களிலுள்ளவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் மண்சரிவு முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆட்டோ ரிக்‌ஷா மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் 15 பேர் பலி..!!
Next post வடக்கில் குற்றச்செயல்கள் அதிகரிப்பு; கட்டுப்படுத்த சுற்றிவளைப்பு..!!