வெழுறத் துடிக்கும் தமிழர்கள்… -நோர்வே நக்கீரா -“அழகுக் (பெண்களின்) குறிப்பை” முன்வைத்து எழுதப்பட்ட சிறப்புக் கட்டுரை..!!
வெழுறத் துடிக்கும் தமிழர்கள்… -நோர்வே நக்கீரா
தமிழர்கள், திராவிடர்கள் கறுப்புநிறம் கொண்டவர்கள், பரந்ததோளுடையவாகள், கட்டிடக் கலையில் விற்பனர்கள் என்பதுமே வரைவுலக்கணம். ஆனால் வடக்கிலிருந்து வந்த நிறமறுந்தவர்களுடன் இணைந்தே மாநிறம் உருவானது.
வெள்ளைநிறம் கொண்ட மனிதர்கள் மெலனின் எனும் நிறப்பொருள் குன்றியவர்களாவர். இந்த நிறப்பொருள் சூரியக்கதிரை வடிகட்டியே உத்ரா வைலெட் கதிர்களை உடலில் செல்லாது தடுத்து சருமத்தைப் புற்று நோயில் இருந்து பாதுகாக்கிறது. சருமப்புற்று நோய் அதிகாக வெள்ளை இனமக்களுக்கே உருவாகுவதை அறிந்திருப்பீர்கள்.
அத்துடன் இந்த மலெனின் என்ற நிறப்பொருள் உடலுக்குத் தேவையான விட்டமின் ஏ டி என்பனவற்றை சூரிய ஒளியில் இருந்து தயாரிக்கிறது. இந்த நற்காரியம் வெள்ளை வெளுறிய மக்களுக்கு இல்லை.
இப்படிப் பெருநன்மைகளைத் தரும் இந்த நிறைப் பொருளை அகற்றுவதில், சாகடிப்பதில் எமது மக்கள் அதிகமாக ஈடுபட்டுள்ளது கவலைக்குரியதே. இதற்கு உதாரணம் மைக்கல் ஜக்சன் (மனது இனமாற்ற கறுப்பினத்தவர்)
நிறங்களை வெழுறப்பண்ணும் பல களிம்புகள் இன்று சந்தைப்படுத்தப்பட்டுள்ளன. இவை மெலனின் எனும் நிறப்பொருளை குறைக்கும் அன்றேன் சாகடிக்கும்.
சில களிம்புகள் நிறத்தை மறைக்கும். இந்த மறைப்புக் களிம்பு (கிறீம்) இரசாயணங்களினாலேயே தயாரிக்கப்படுகிறது. இதனுடைய தாக்கம் சருமத்துக்கு இருக்கும் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.
எம்மவர்கள் வெள்ளையாக மாறுவதற்கு கிறீம் பாவிப்பது போல் வெள்ளையர்கள் மண்ணிறமாகவதற்கும் கிறீம் பாவிக்கிறார்கள். அந்தக்களிம்புகளும் சருமத்தைப் பாதிக்கின்றன என்பது வைத்தியர்களின் அறிவித்தல் கோப்புக்கள் கூறுகின்றன.
ஆக எந்த ஒர் இயற்கைக்கு எதிரான தயாரிப்புக்களும் உடல் நலத்தைப் பாதிக்கும் என்பது திண்ணம்.
வெள்ளையை அழகு என்ற ஒரு பிரேமையை மனதில் கொண்டு தம்மைத் தாமே தாழ்திக் கொள்ளும் தமிழர்கள் இனியாவது உணர்ந்து கொள்ளுங்கள் இறைவனால் தரப்பட்ட இயற்கை மருந்தே இந்த மெலனின் எனும் மண்ணிற நிறப்பொருள்.
இதை அழித்து விட்டு ஒரிருநாள் அழகுக்காக ஆயுட்காலம் முழுவதும் சருமநோயில் அவதியுறப் போகிறீர்களா? இப்படியான களிப்புகள் அதிகவிலை கொண்டவை என்பதையும் நீங்கள் அறிவீர்கள். இதைத்தான் சொல்வார்கள் பொல்லுக் கொடுத்து அடிவாங்குவது என்று.
இப்படியான இரசாயணக் களிப்புகளால் சருமச்சுருக்கம், முகம் காய்தல், வெடித்தல், சருமப்புற்றுநோய், உணர்வின்றிப்போதல் போன்ற பல வியாதிகள் உருவாகின்றன.
அழகு நிலையங்களை உருவாக்கி அங்கே ஆயுள் பூராகவும் அழகற்றுப் போகும் நடவடிக்கைகளே நடக்கின்றன.
வெளிறும் கழிப்புகளைத் தயாரிப்பவர்கள் தமது தயாரிப்புக்களின் சந்தைப் படுத்தலுக்காக எதையும் செய்வார்கள் சொல்வார்கள். நாம் தான் அவதானமாக இருக்கவேண்டும்.
நான் எந்தத்தாயரிப்பையும் தனியாகக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. பொதுவாக வெளுறப்பண்ணும் களிப்புகள் ஆபத்தானவை. கெடுகிறேன் பிடி பந்தயம் என்றால் நாம் என்ன செய்யமுடியும்.
அவித்த இறால் போல் திரிவதுதான் அழகு என்று கண்டால் இவ்வகையான வெளிறல் களிப்புகளைப் பாவியுங்கள். இந்தவகையான வெளிறும் கிறீம்களினுள் மேக்குரி அதாவது பாதரசம் எனும் ஒர் இரசாயணத்திராவகம் பாவிக்கப்படுகிறது.
இதுவே நிறத்தை வெளிறச் செய்வதற்கான மூலப்பொருளாக உள்ளது. தயாரிப்பாளர்கள் இதை மறுக்கலாம். உண்மை நிலை என்ன என்று அறிவதே அறிவும் அழகும் ஆகும்.
ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு வகையில் அழகாகவே படைக்கப்படுகிறான். அறிவுகூட ஒரு வகை அழகு தான். சிறிது சிந்தித்துப் பாருங்கள் எமது நிறத்தில் மஞ்சள் முடியுடன் நாம் படைக்கப்பட்டிருந்தால் அழகு எப்படி இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்.
இயற்கையின் படைப்பில் அனைத்தும் ஒரு காரணம் கருதியே உருவாக்கப்படுள்ளது என்பதை அறிக.
களிப்புகளில் குளம்பி வெதும்பி அழிந்து போகாது இயற்கை அழகுடன் இயற்கையில் கிடைக்கும் பொருள்களுடாக உங்களை மெருகேற்றுங்கள். இயற்கைக்கு எதிரான அனைத்தும் எமது எதிரிகளே..!!!
Average Rating