மழை வீழ்ச்சிக்காக செயற்கை மலை நிர்மாணம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆராய்கிறது..!!
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மழை வீழ்ச்சியை ஏற்படுத்துவதற்காக செயற்கையாக மலைகளை நிர்மாணிப்பதற்கு அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மத்திய கிழக்கு நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மழை வீழ்ச்சி குறைவாக உள்ளது. இந்நிலையில் காற்றை குளிர்வித்து மழையை ஏற்படுத்துவதற்காக செயற்கையாக மலையொன்றை நிர்மாணிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவைத் தளமாகக்கொண்ட யூனிவர்ஸிட்டி கோர்ப்பரேஷன் ஃபோர் அட்டோம்ப்ஷயர் ரிசேர்ச் (யூ.சி.ஏ.ஆர்.) எனும் நிறுவகத்தைச் சேர்ந்த நிபுணர்கள், இந்த செயற்கை மலைக்கான மாதிரிகள் (மொடல்) குறித்து ஆராய்ந்து வருகின்றனர் என தலைமை ஆராய்ச்சியாளரான ரோலப் புருய்ன்ஜெஸ் தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட நடவடிக்கையின் அறிக்கையொன்று இந்த கோடைப் பருவத்தில் எமக்கு கிடைக்கும் என அவர் கூறினார்.
இத்திட்டத்தின்படி சுமார் 2 கிலோ மீற்றர் உயரமான மலையொன்று நிர்மாணிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இம்மலை எந்த இடத்தில் நிர்மாணிக்கப்படும், அதற்கான செலவு எவ்வளவு என்பது குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை. மலையை நிர்மாணிப்பதற்காக பல்வேறு இடங்கள் ஆராயப்பட்டு வருகின்றன என ரோலப் புருய்ன்ஜெஸ் கூறினார்.
செயற்கையாக மலையை நிர்மாணிப்பது இலகுவான விடயமல்ல. இத்திட்டம் அரசாங்கத்துக்கு மிக அதிக செலவை ஏற்படுத்தும் எனில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட மாட்டாது.
ஆனால், நீண்ட கால அடிப்படையில் எத்தகைய மாற்று வழிகளைக் கையாளலாம் என்பது குறித்த ஒரு யோசனை இது” எனவும் அவர் தெரிவித்தார்.
ஓமானுடனான எல்லையிலுள்ள 1925 மீற்றர் (6316 அடி) உயரமன ஜெபில் அல் ஜேசிஸ் சிகரமானது ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மிக உயரமான சிகரமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating