கிராமவாசிகளால் கொண்டாடப்பட்ட ‘வானத்திலிருந்து வந்த தேவதை’ ஒரு பாலியல் பொம்மை என இந்தோனேஷிய பொலிஸார் கண்டறிந்தனர்…!!

Read Time:3 Minute, 4 Second

ssaஇந்தோனேஷிய கடற்கரையொன்றில் கிடந்த பொம்மையொன்று மனித சாயலில் இருப்பதை கண்ட கிராமவாசிகள், அதனை வானத்திலிருந்த வந்த தேவதை என வர்ணித்து, வீட்டில் வைத்து தினமும் பல்வேறு ஆடைகளை அணிவித்து அழகுபார்த்து வந்த நிலையில், அது ஒரு பாலியல் பொம்மை என பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

இந்தோனேஷியாவின் பெங்காகி தீவிலுள்ள கடற்கரையோரத்தில் இந்த பொம்மை மிதந்துகொண்டிருப்பதை மீனவனான பார்டின் எனும் இளைஞர் கண்டார். சூரிய கிரகணம் ஏற்பட்டதற்கு மறுநாள் இந்த பொம்மை கண்டெடுக் கப்பட்டது.

வெள்ளை ஆடையொன்று இந்த பொம்மைக்கு அணிவிக்கப் பட்டிருந்தது. இந்த பொம்மையின் பெண்ணைப் போன்ற தோற்றத்தை அவதானித்த பார்டின் அதனை ஒரு தேவதையாகக் கருதினார்.

அதனை கலுபபி எனும் தனது கிராமத்துக்கு அவர் எடுத்துச் சென்றார். அக் கிராமத்திலுள்ளவர்கள் அந்த பொம்மைக்கு தினமும் பலவிதமான ஆடைகளை அணிவித்து அழகு பார்த்தனர்.

அந்த பொம்மையை கதிரையொன்றில் அமர வைத்தபோது யுவதியொருவர் அமர்ந்திருப்பதைப் போன்றே இருந்தது.

“வானத்திலிருந்து வந்த தேவதை” என அவர்கள் அந்த பொம்மையை வர்ணித்தனர். மீனவரால் கண்டெடுக்கப்பட்ட இந்த “தேவதை” பொம்மை குறித்த தகவல் சில நாட்களில் உள்ளூர் ஊடகங் களிலும் பரவத் தொடங்கியது.

அதையடுத்து, பொலிஸாரும் அக்கிரா மத்துக்குச் சென்று அந்த “வானத்திலிருந்து வந்த தேவதை” குறித்து விசாரித்தனர். அதன்பின், அக் கிராமத் தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த பொம்மை ஒன்றும் தேவதை அல்ல எனவும் அது உண்மையில் எனவும் பொலிஸார் கண்டறிந்தனர்

“எமது குழுவினர் அதனை ஆராய்ந்தனர். அது ஒரு பாலியல் பொம்மை” என உள்ளூர் பொலிஸ் அதிகாரியான ஹெரு பிரமுகார்னோ தெரிவித்துள்ளார்.

இந்த பொம்மை குறித்து பல வ தந்திகள் பரவியபோதிலும் அது வானத்திலிருந்து வீழ்ந்ததாக இருக்க முடியாது எனவும் அப்பகுதியில் சென்ற படகொன்றிலிருந்து வீசப்பட்டிருக்கலாம் எனவும் தான் சந்தேகித்ததாக உள்ளூர்வாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எவரெஸ்ட் சிகரத்தில் உயிரிழந்த மலை ஏறும் வீரர்களின் உடல்கள் 16 வருடங்களுக்குப் பின் கண்டெடுப்பு…!!
Next post தென் அமெரிக்க சேர்க்கஸ் நிறுவன ங்களிலிருந்து மீட்கப்பட்டு ஆபிரிக்காவுக்கு விமானங்களில் பறந்த 33 சிங்கங்கள்…!!