மெலிந்த குழந்தையின் எடையை அதிகரிக்கும் உணவுகள்…!!

Read Time:3 Minute, 11 Second

மெலிந்த-குழந்தை-615x350மெலிந்த குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க ஒரு குறிப்பிட்ட உணவுகள் உதவி புரியும்.
மெலிந்த குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க ஒரு குறிப்பிட்ட உணவுகள் உதவி புரியும். அதில் புரோட்டீன் நிறைந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்கையில் தசைகள் வளர்ச்சிப் பெற்று, உடல் எடை அதிகரிக்கும். எனவே உங்கள் குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க நினைத்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களை உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்து வாருங்கள்.

healthy tips for weight gain in kids

வெண்ணெயில் நல்ல கொழுப்புக்கள் உள்ளது. எனவே ஒல்லிக்குச்சி போன்று உள்ள உங்கள் குழந்தைக்கு வெண்ணெய் நிறைந்த உணவுப் பொருட்களை தினமும் கொடுத்து வாருங்கள். இதனால் தானாக உடல் எடை அதிகரிக்கும்.

பால் பொருட்களான பால் மற்றும் க்ரீம்களில் கலோரிகள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. ஆகவே தினமும் உங்கள் குழந்தைக்கு தவறாமல் 2 டம்ளர் பால் கொடுங்கள். மேலும் செரில் ஏதேனும் சாப்பிடுவதற்கு கொடுப்பதாக இருந்தால், அத்துடன் க்ரீம் சேர்த்துக் கொடுங்கள்.

முட்டையில் புரோட்டீன் வளமாக உள்ளது. இதனை தினமும் வளரும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், அவர்களின் வளர்ச்சி அதிகரிப்பதோடு, உடல் எடையும் அதிகரிக்கும். மேலும் முட்டையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி12 போன்றவை அதிகம் உள்ளது.

வாழைப்பழத்தில் உடலின் ஆற்றலை உடனடியாக அதிகரிக்கும் உட்பொருட்கள் மற்றும் கலோரிகள் உள்ளது. மேலும் இதில் அத்தியாவசிய கார்போஹைட்ரேட்டுகளும் நிறைந்துள்ளதால், இது உடலில் நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரித்து, உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும்.

சிக்கனில் புரோட்டீன் நல்ல அளவில் உள்ளது.

மேலும் இது தசைகளின் வளர்ச்சிக்கும் உதவும். ஆகவே உயரத்திற்கு ஏற்ற உடல் எடை இல்லாத குழந்தைகளுக்கு, சிக்கனை அடிக்கடி கொடுத்து வாருங்கள். இதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

வெண்ணெய் பழம் உடல் எடை குறைவாக உள்ளவர்களுக்கு ஏற்ற ஓர் பழம். இதில் நல்ல கொழுப்புக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் ஏராளமான அளவில் உள்ளது. இதனை தினமும் உணவில் சேர்த்து வந்தால், ஆரோக்கியமான வழியில் உடல் எடையை அதிகரிக்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரத்தவிருத்திக்கு உலர் திராட்சை சாப்பிடுங்கள்…!!
Next post 18 ஆண்டாக பெண் வயிற்றில் இருந்து கத்திரிகோல் அகற்றம்: ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் ஆபரேஷன்..!!