புதுக்குடியிருப்பில் தமிழீழ வைப்பகத்தின் தங்கநகை புதையல் நடவடிக்கை நிறுத்தம்..!!

Read Time:2 Minute, 34 Second

13043607_503661379839094_4120868964264015888_n-300x197முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து நீதிமன்றத்தின் அனுமதியுடன் தங்க அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தில் இயங்கி வந்த தமிழீழ வைப்பகத்தின் தலைமைச் செயலகம், கேப்பாபுலவுவீதி, லூத்மாதா சந்தியில் உள்ள இரண்டாம் காணியில் 2009 ஆம் ஆண்டு வரை செயற்பட்டு வந்தது.

குறித்த இடம் இராணுவக் கட்டுப்பட்டிற்குள் வரும் முன்னர் வைப்பகத்தின் தலைமைச் செயலகத்திற்கு முன்னால் இருந்த தனியார் ஒருவரின் வெற்றுக் காணியில் இருந்த ஆழமான மண் கிணற்றுக்குள் மக்கள் அடைவு வைத்த தங்க நகைகளை போட்டு கிணற்றை தூற்றியுள்ளனர்.

இந் நிலையில் தமிழீழ வைப்பகத்துடன் தொடர்புடைய விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர் ஒருவர் நீதிமன்றத்தின் ஊடக குறித்த தகவலை வழங்கியுள்ளார்.

இதனையடுத்தே முல்லைத்தீவு நீதிமன்றத்தின் அனுமதியுடன் நேற்றய தினம் குறித்த அகழ்வு பணிகள் இடம்பெற்றுள்ளன. குறித்த அகழ்வு பணிகள் நடைபெறும் இடத்தில் மாவட்ட நீதிபதி சமூகமளித்துள்ளதுடன் இலங்கை மின்சார சபையினர் சிறப்பு மின்னிணைப்பு செய்துள்ளனர் . இந்நிலையில் எதுவும் கிடைக்கப்பெறாததால் இன்றயதினம் 2.00 மணிக்கு மீண்டும் அகழ்வு பணி இடம்பெறுவதாக இருந்தது இருப்பினும்

குறித்த அகழ்வுப் பணிக்காக பெரிய அழவிலான பெக்கோ இயந்திரம் கிடைக்கவில்லையென புதுக்குடியிருப்பு பிரதேசசபையினர் தெரிவித்தனர் இதனையடுத்து அகழ்வு பணிகள் மற்றுமொரு நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன் அந்த பகுதிக்கு புதுக்குடியிருப்பு பொலிசாரை பாதுகாப்பு வழங்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலன் யாருக்கு? நடுரோட்டில் மல்லுக்கட்டிய இளம்பெண்கள்..!! (வீடியோ)
Next post முள்ளியான் பகுதியில் வெள்ளைவானில் இருவர் கடத்தல்…!!