கேரளாவில் 1000 ஆண்டு பழமையான பள்ளிவாசலில் பெண்களுக்கு அனுமதி..!!

Read Time:2 Minute, 11 Second

வழிபாட்டு தலங்களில் ஆண், பெண் என்ற பேதம் பார்க்ககூடாது. அனைத்து வழிபாட்டு தலங்களிலும் அனைவரையும் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நாடுமுழுவதும் எழுந்து உள்ளது.

குறிப்பாக கேரளாவில் உள்ள பிரசித்திபெற்ற சபரி மலை சுவாமி அய்யப்பன் கோவிலில் 10 வயதுக்கு மேற்பட்ட, 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் அனுமதிக்க படாதது தொடர்பான பிரச்சினை சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது.

இதுபோல பல்வேறு வழிபாட்டு தலங்களில் வழிபாடு தொடர்பாக கோரிக்கைகள் தொடர்ந்து எழுந்தவண்ணம் உள்ளது.

கேரளாவில் கோட்டயம் மாவட்டத்தில் தாழத்தங்காடி ஜும்மா பள்ளிவாசல் உள்ளது. ஆயிரம் ஆண்டு பழமையான இந்த பள்ளிவாசல் அழகிய வேலைபாடுகளுடன் கேரள பாணியில் கட்டப்பட்டதாகும்.

இந்தியாவில் உள்ள புராதன பள்ளிவாசல்களில் இதுவும் ஒன்றாகும். இங்கு ஏராளமானோர் தினமும் வருகை தருகிறார்கள்.

ஆனால் இந்த பள்ளிவாசலில் இதுவரை பெண்கள் அனுமதிக்கப்படாத நிலை இருந்து வந்தது. தற்போது இந்த முறை மாற்றப்பட்டு பள்ளிவாசலுக்குள் பெண்களும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

நேற்று முதல் பெண்கள் இந்த பள்ளிவாசலுக்கு சென்று வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் ஏராளமான பெண்கள் பள்ளிவாசலுக்கு சென்றனர். தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பெண்களுக்கு இந்த பள்ளிவாசலில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் அவர்கள் பிரார்த்தனை செய்யக் கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒவ்வொருவரும் வாழ்வில் மிஸ் பண்ணக்கூடாத சில இடங்கள்..!!
Next post சிரியாவில் ஷியா பிரிவு வழிபாட்டு தளம் அருகே கார் வெடிகுண்டு தாக்குதல்: 15 பேர் பலி…!!