திருமணத்துக்கு திகதி குறிக்கப்பட்ட யுவதி விபத்தில் சிக்கி மரணம்…!!

Read Time:1 Minute, 49 Second

dead (11)மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதூர் வீச்சுக்கல்முனை வீதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சைப் பெற்றுவந்த யுவதி, இன்று செவ்வாய்க்கிழமை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வீச்சுக்கல்முனை பிரதான வீதியைச் சேர்ந்த விமலநாதன் விநோதினி (வயது 24) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த யுவதி வீட்டிலிருந்து கடைக்கு பொருட்கள் வாங்க தெருவுக்குச் சென்று கொண்டிருக்கும்போது உன்னிச்சைக் குளத்துக்கு நீராடச் சென்று திரும்பிக் கொண்டிருந்தவர்கள் பயணித்த வேன் ஒன்று, யுவதி மீது மோதுண்டதில் தூக்கி எறியப்பட்டு அருகிலிருந்த மின்சாரக் கம்பத்துடன் மோதுண்டுள்ளார்.

படுகாயமடைந்த யுவதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் சிக்கி மரணித்த யுவதிக்கு மே 17ஆம் திகதி திருமணத்துக்கு நாள் குறிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 3 கைக்குண்டுகளுடன் ஐஸ்கிரீம் கண்டைனர் மீட்பு…!!
Next post கே.கே.எஸ் வீதி விபத்தில் பெண் படுகாயம்…!!