வேற்றுக்கிரக வாசிகள் பற்றிய புதிய ஆய்விற்கு உதவும் மார்க் சக்கபேர்க்..!!

Read Time:3 Minute, 37 Second

retrtrtபிரபஞ்சத்தில் பால்வெளி என அழைக்கப்படும் எண்ணற்ற நட்சத்திர கூட்டங்கள், பெரிய நட்சத்திரங்கள் வெடித்துச் சிதறும் போது உருவாகும் சிறிய நட்சத்திரங்கள், அவற்றை சுற்றி வரும் கிரகங்கள் அவற்றின் துணை கோள்கள் நிரம்பியுள்ளன.

பிரபஞ்சத்தின் ஏதேனும் ஒரு மூலையில் பூமியை போன்ற உயிர்வாழ்வதற்கு ஏற்ற கிரகங்களும் அதில் உயிர்களும் இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வான்வெளி விஞ்ஞானிகள் தொடர்ந்து நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் வேற்றுகிரகத்தில் உயிரினங்கள் இருக்கின்றன என்பதற்கான சான்றுகள் இதுவரை கிடைக்கவில்லை.

இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த விண்வெளி விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா என்பதை ஆராய புதிய திட்டம் ஒன்றை லண்டனில் தொடங்கியுள்ளார்.

இந்த திட்டத்திற்காக அடுத்த 10 ஆண்டுகளில் 640 கோடி ரூபா செலவழிக்கப்படும் ரஷ்யாவை சேர்ந்த சிலிகான் வேலி தொழில் அதிபர் யூரி மில்னர் இந்த திட்டத்திற்கு நிதி உதவி அளிக்க முன்வந்துள்ளார்.

இந்த திட்டத்திற்கு கேம்ரீஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியலாளர் ,காஸ்மோலாகிஸ்ட் பேராசிரிய லார்டு மார்ட்டீன் ரீஸ், தலைமை தாங்குகிறார்.

இந்த திட்டத்தின் மூலம் வானம் 10 மடங்கு அதிகமாக கண்காணிக்கப்படும் வேற்று கிரகவாசிகளின் பரிமாற்றங்களை கேட்க உலகில் மிக சக்தி வாய்ந்த இரண்டு​ ரேடியோ தொலை நோக்கிகள் முன்னணி விஞ்ஞானிகளை கொண்டு நிறுவப்படுகிறது.

மற்றொரு தொலைநோக்கி மற்ற உலகங்களில் இருந்து வரும் லேசர் சிக்னல்களை தேடும் இந்த தொலைநோக்கிகள் மூலம் பூமியை தவிர மற்ற நட்சத்திரங்கள், கிரகங்களில், விண்வெளியில் வேற்று உயிரினங்கள் வாழ்கின்றனவா என ஆய்வு செய்யப்படும்.

அவுஸ்திரேலியாவில் நியூசவுத் வேல்சில் 210 அடி பார்க் தொலைநோக்கி மூலமும், மேற்கு வர்ஜினியாவில் ( 328 அடி பர்ட் கிரீன் பேங்க் தொலைநோக்கியும் நிறுவப்பட்டு 10 ஆண்டுகள் கண்காணிக்கப்படும்.

மேலும் ஒலியைவிட 20 மடங்கு வேகத்தில் செல்லும் விண்வெளி வாகனத்தை தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

இந்த திட்டத்துக்கு ஏற்கனவே ரஷ்ய தொழில் அதிபர் யூரி மில்னர் நிதி உதவி அளிக்க முன்வந்துள்ளார். தற்போது பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் 100 மில்லியன் அமெரிக்க டாலர் உதவி அளிக்க முன்வந்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதல்ஜோடியை மரத்தில் கட்டி வைத்து சித்ரவதை…!!
Next post இரு வெளிநாட்டு யுவதிகளை பாலியல் வல்லுறவிற்குட்படுத்த முயன்றவரைத் தேடி பொலிஸார் வலைவீச்சு..!!