முல்லைப்பெரியாறு அருகே நிலநடுக்கம்…!!

Read Time:1 Minute, 43 Second

erth-310x165முல்லைப்பெரியாறு, இடுக்கி அணைகளுக்கு அருகே திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அணைகளுக்கு பாதிப்பு இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி அணை அருகிலும், இடுக்கி மாவட்டம் உப்புத்துறை பகுதியில் முல்லைப்பெரியாறு அணை அருகிலும் நேற்றுமுன்தினம் இரவும், அதிகாலை நேரத்திலும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதனால் அணைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்குமோ என்ற கேள்வி எழுந்தது.இது தொடர்பாக கேரள பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதாவது:இடுக்கி அணை, முல்லைப்பெரியாறு அணை அருகே 2 முறை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கத்தின் அளவு 1.5 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.இந்த நிலநடுக்கம் காரணமாக அணைகளின் உறுதித்தன்மையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும் அணையில் இருந்து சில கிலோ மீட்டர் தூரம் வரை குடியிருப்புகள் எதுவும் இல்லை.

இதனால் பொதுமக்கள் இந்த நிலநடுக்கத்தை உணர வாய்ப்பு இல்லை. மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா? என்று ஆய்வு நடத்தப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நேபாளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 24 பேர் பலி..!!
Next post நிகழ்ச்சிக்கு ஒத்திகை பார்த்த வாலிபர் தீயில் கருகி பலி…!!