குழந்தையை உயிருடன் சாப்பிட்ட எறும்பு கூட்டம் தாய்க்கு 30 வருடம் சிறை…!!

Read Time:2 Minute, 24 Second

baby4-310x165மெக்சிகோவை சேர்ந்தவர் மரியனா லிசத் (20 கடந்த ஆண்டு,ல்லூனா எஸ்டிபேனியா என்ற பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு 18 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், குழந்தையை சரியாக பராமரிக்காமல் மரியனா அலட்சியமாக இருந்து உள்ளார். இதனால் பசியால் வாடிய அக்குழந்தையின் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி கடந்த ஆண்டில் ஏப்ரல் முதல் மே மாதங்களில் அக்குழந்தைக்கு தாய்ப்பால் கூட கொடுக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில், போதிய உணவு கூட கிடைக்காமல் ஒரே இடத்தில் குற்றுயிராய் கிடந்த அக்குழந்தையினை எறும்புகூட்டங்கள் சாப்பிட்டு உள்ளன. இதனால் குழந்தியின் உடல் பாகங்கள் பல பாதி சேதமடைந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அக்குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், இக்குழந்தை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் இக்குழந்தையின் பாதி உடல் பாகங்களை எறும்பு சாப்பிட்டுவிட்டது என கூறியுள்ளார்.

மேலும், தாங்க முடியாத வலியால் இக்குழந்தை தவித்துள்ளது எனவும் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து 2 மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

இதற்கிடையில், இப்பெண்ணின் வீட்டிற்கு அருகில் வசிப்பவர்களும், இப்பெண் குழந்தையை சரியாக பராமரிக்கவில்லை என போலிசில் புகார் தெரிவித்ததையடுத்து, இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான விசாரணையில், இவருக்கு 30 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து மெக்ஸிகோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜிகா வைரஸ் ’நினைத்ததை விட பயங்கரமானது…!!
Next post முதியவரின் ஆசையை நிறைவேற்றிய வில்லியம்…!!