மும்பையில் தோசை சுட்டு சாப்பிட்ட இங்கிலாந்து இளவரசர் வில்லியம் – கேத் தம்பதியர்…!!

Read Time:3 Minute, 34 Second

201604111522139241_When-the-British-Royalty-made-a-Dosa_SECVPFஇந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இங்கிலாந்து இளவரசர் வில்லியம் – கேத் தம்பதியர் தென்னிந்தியாவின் பிரபல சிற்றுண்டி வகைகளில் ஒன்றான தோசையை சுவைத்து மகிழ்ந்தனர்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய இங்கிலாந்து பட்டத்து இளவரசர் பட்டியலில் இரண்டாவதாக இடம்பெற்றுள்ள வில்லியம் மற்றும் அவரது மனைவி கேத் மிடில்டன் ஆகியோர் மராட்டிய தலைநகரான மும்பை வந்தடைந்தனர்.

ஏப்ரல் 10 முதல் 17-ம் தேதிவரை அரசு விருந்தினராக இங்கு தங்கும் வில்லியம்-கேத் தம்பதியர் மும்பை, கவுகாத்தி, ஆக்ரா நகரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க தாஜ் மஹால் உள்பட நாட்டிலுள்ள பல்வேறு முக்கிய இடங்களையும் சுற்றிப் பார்க்கின்றனர்.

இதற்காக, நேற்று பகல் சுமார் 12 மணியளவில் மும்பை நகரை வந்தடைந்த இளவரசர் வில்லியம் – கேத் மிடில்டன் தம்பதியர் இங்குள்ள தாஜ் ஹோட்டலில் தங்கியுள்ளனர். இந்த ஓட்டலில் உள்ள விழா அரங்கில் நேற்று மாலை அவர்களுக்கு பாலிவுட் பிரபலங்கள் சார்பில் பிரமாண்ட வரவேற்பு விழா நடத்தப்பட்டது.

இந்த வரவேற்பு விழாவில் நடிகர்கள் ஷாருக் கான், ஆமிர் கான், அனில் கபூர், ரிஷி கபூர், ஹ்ரித்திக் ரோஷன், பர்ஹான் அக்தர், நடிகைகள் ஐஸ்வர்யா ராய் பச்சன், மாதுரி திட்சித், அடிட்டி ராவ் ஹைதரி, ஹுமா குரைஷி, பழம்பெரும் நடிகர் ரிஷி கபூர், அவரது மனைவி நீட்டு, பாடகரும் இசையமைப்பாளருமான ஷங்கர் மஹாதேவன், ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் உள்ளிட்ட பல்துறை பிரபலங்கள் பங்கேற்றனர்.

இன்று மும்பையில் நடைபெற்ற ‘ஸ்ட்ராட் அப் இந்தியா’ நிகழ்ச்சியில் வில்லியம் – கேத் தம்பதியர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் வீட்டு உபயோகப் பொருட்கள், மின்சார உபகரணங்கள் உள்ளிட்ட நவீன கண்டுபிடிப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றில், நவீனரக தோசை தயாரிக்கும் இயந்திரமும் ஒன்றாகும்.

இந்த இயந்திரத்தை பாட்வையிட்ட வில்லியம் – கேத் தம்பதியர், அது இயங்கும் விதம்பற்றி தயாரிப்பாளரான ஈஷ்வர் விகாஸ் என்பவரிடம் ஆர்வமாக கேட்டறிந்தனர். பின்னர், அந்த இயந்திரத்தில் உள்ள தோசைக் கல்லில் இளவரசர் வில்லியம் ஒரு கரண்டி மாவை ஊற்ற, தானியங்கி முறையில் ஒரு நிமிடத்துக்குள் முறுமுறுப்பான ‘கமகம’ தோசை வெளியே வந்தது.

அந்த தோசையின் சிறுபகுதியை சுவைத்து மகிழந்த வில்லியம் – கேத் தம்பதியர், இந்த ‘தோசை அனுபவம்’ மிக இனிமையாக இருந்ததாக குறிப்பிட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கணவர் வீட்டு முன் 5–வது நாளாக போராட்டம் நடத்தும் இளம்பெண்ணை ஆபாசமாக பேசிய பெண் போலீஸ் அதிகாரி…!!
Next post போலீஸ் துப்பாக்கி சூட்டில் உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்தது: 11 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..!!