மேலூர் அருகே பள்ளி மாணவி திருமணம் தடுத்து நிறுத்தம்…!!

Read Time:1 Minute, 26 Second

201604111643584709_child-marriage-stopped-near-melur_SECVPFமேலூர் அருகே இன்று காலை நடக்க இருந்த குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக மணமகன் மற்றும் அவரது பெற்றோரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சருகு வலையப்பட்டியை சேர்ந்த பிளஸ்–1 படித்து வரும் 17 வயது மாணவிக்கும் அவரது உறவினர் ஒத்தப்பட்டி பிரபு (26) என்பவருக்கும் இன்று காலை திருமணம் நடப்பதாக இருந்தது.

இது குறித்து மேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அம்பிகா, சப்–இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி, ஏட்டு ரதி ஆகியோர் அதிகாலையில் மாணவியின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது மாணவி திருமண வயதை எட்டவில்லை என்பது தெரியவந்தது.

இதை தொடர்ந்து போலீசார் அங்கிருந்த மணமகன் பிரபு, அவரது தந்தை ராஜரத்தினம் மற்றும் தாய் ஆகியோரை கைது செய்தனர். பள்ளி மாணவியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரஷியாவில் போலீஸ் நிலையம் அருகே தற்கொலைப்படை தாக்குதல் – குண்டுவெடிப்பு..!!
Next post உளுந்தூர்பேட்டை அருகே அரசு பஸ்-கார் மோதிய விபத்தில் தீப்பற்றி எரிந்தது: 35 பயணிகள் உயிர் தப்பினார்கள்..!!