பெற்ற மகளையே கருணைக் கொலை செய்த தந்தை! தீயிட்டு எரித்த கொடூரம்…!!

Read Time:4 Minute, 7 Second

monica_002கர்நாடகாவில் பெற்ற மகளையே கருணைக் கொலை செய்த தந்தை மற்றும் தாய்மாமனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடகாவின் மண்டியா மாவட்டத்திலுள்ள திம்மன ஒசூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன் பெவூரா கவுடா(வயது 44).

இவரது மகள் மோனிகா(வயது 19), தனியார் கல்லூரியில் பியூசி 2ம் ஆண்டு படிக்கிறார்.

கடந்த மார்ச் 31ம் திகதி கல்லூரிக்கு சென்ற மோனிகா வீடு திரும்பவில்லை, எனவே அவரது குடும்பத்தினர் பொலிசில் புகார் அளித்தனர்.

தீவிர தேடுதலுக்கு பிறகு கடந்த 2ம் திகதி மோனிகாவை கண்டுபிடித்த பொலிசார், அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் அன்றிரவே 8 மணியளவில் மர்மமான முறையில் காலமானார், இத்தகவலை பொலிசாருக்கு கூட தெரிவிக்காமல் மறுநாள் காலை அவரது உடலை தீயிட்டு கொளுத்தினர்.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர், விரைந்து வந்த அதிகாரிகள் மோனிகாவின் தந்தையிடம் நடத்திய விசாரணையில், பியூசி 2-ம் ஆண்டு தேர்வில் தோல்வி அடைந்து விடுவோம் என பயந்து, வீட்டின் அருகிலுள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

உள்ளூர் கோயில் திருவிழா தொடங்க இருப்பதால், உடலை உடனடியாக எடுக்குமாறு ஊர் பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர். அதனால் மோனிகாவின் உடலை எங்களது தோட்டத்திலே தகனம் செய்துவிட்டோம் என கூறியுள்ளார்.

இந்நிலையில் மோனிகா கொலையில் மர்மம் இருப்பதாகவும், அதனை கண்டுபிடிக்குமாறும் மண்டியா மாவட்ட காவல் கண்காணிப்பாளரான சுதீர் குமாருக்கு ரகசிய புகார் வந்துள்ளது.

இதனையடுத்து சுதீர் குமார் மோனிகாவின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தியதில் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கொடுத்துள்ளனர்.

தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தியதில், மோனிகா தலித் இளைஞர் ஒருவரை காதலித்து வந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த போதும், அவர் பிடிவாதமாக இருந்தார்.

ஒரு கட்டத்தில் அந்த தலித் இளைஞருடன் வீட்டை விட்டு சென்றுவிட்டார். எங்களின் குடும்ப மரியாதையைக் காப்பாற்றி கொள்வதற்காக அவரை கண்டுபிடித்து, அன்றிரவே அடித்து கொலை செய்தோம்.

பொலிசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக மோனிகாவின் உடலை வீட்டின் அருகில் உள்ள மரத்தில் தொங்கவிட்டோம். எங்களது தற்கொலை நாடகத்தை உறவினர்கள் நம்பினர்.

இந்த கொலையில் மோனிகாவின் தாய் மாமன்கள் சுரேஷ் (35) ராமகிருஷ்ணா (31) ஆகிய இருவரும் உதவி செய்தார்கள். தடயங்களை அழிக்கும் வகையில் அதிகாலையிலே மோனிகாவின் உடலை எரித்துவிட்டோம் என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து மோனிகாவின் தந்தை மற்றும் தாய்மாமனை பொலிசார் கைது செய்தனர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அய்யோ நாற்றம் தாங்கலையே! திமிங்கலத்தின் வயிற்றில் உயிர் வாழ்ந்த நபர்..!!
Next post “தமிழினி” வாழ்க்கை பற்றி ‘கச்சான் விற்று பிழைப்பு’ நடத்தும் தமிழினியின் தாய் சின்னம்மா வழங்கிய சிறப்பு பேட்டி..! (நிறைந்த சோகம்)