கொரில்லாக் குட்டியும் மனித அம்மாவும்: ஒரு உண்மைக்கதை..!!
குழந்தை சேஷ்டைகள் தெரியும்; கொரில்லாக்குட்டியின் சேஷ்டைகள் தெரியுமா?
சொந்த அம்மாவுக்கு பேறுகாலத்தில் திடீரென உடல்நலம் சரியில்லாமல் போனதால் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் பிறந்த கொரில்லாக்குட்டி ஒன்று மனித அம்மாவிடம் பாசமாய் வளர்கிறது.
பொதுமக்களின் வாக்கெடுப்பு மூலம் அஃபியா என்று இந்த குட்டிக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. கானா மொழியில் வெள்ளிக்கிழமை குழந்தை என்று பொருள்.
சென்றமாதம் (பிப்ரவரி 2016) ஒரு வெள்ளிக்கிழமையன்று தான் இவரது தாய் பேறுகாலத்தில் உடல் நலமில்லாமல் போக அபூர்வமான சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் பிறந்தது அஃபியா.
இதன் தாய்க்கு உடல்நிலை சரியாகும்வரை இங்கிலாந்தின் பிரிஸ்டல் மிருகக்காட்சி சாலை பணியாளர்கள் தான் இதை பராமரிக்கவேண்டும். அந்த பணியை செய்கிறார் இரண்டு குழந்தைகளின் தயான லிண்ட்ஸி பக். பிரிஸ்டல் மிருகக்காட்சி சாலையின் பாலூட்டி பராமரிப்பாளர் இவர்.
பகலில் மட்டுமல்ல, இரவில்கூட இதை வீட்டுக்கு எடுத்துச் சென்று அழும்போதெல்லாம் பால் புகட்ட வேண்டும்.
அஃபியாவும் தானும் வீட்டின் கீழ்தளத்தில் தனியாக உறங்குவதாகவும் தன் கணவரும் இரண்டு மனிதக் குழந்தைகளும் முதல் தளத்தில் தனியாக தூங்குவதாகவும் பிபிசியிடம் தெரிவித்தார் லிண்ட்சி.
“மாலையில் போய் படுக்கையைத் தயார் செய்தபடியே தொலைக்காட்சியை பார்ப்பேன், டீ போடுவேன்… இதற்கு மத்தியில் குறிப்பிட்ட இடைவேளையில் இதற்கு பால் புகட்டுவேன். கிடைக்கும் நேரத்தில் குட்டித்தூக்கம் போடுவேன். கைக்குழந்தை இருந்தால் எப்படி தூக்கம் போகுமோ அப்படித்தான் இதுவும். ஒருவகையில் இது என் மூன்றாவது குழந்தை மாதிரி தான்,” என்றார் லிண்ட்சி.
அஃபியாவை அதன் கொரில்லா குடும்பத்தோடு சேர்க்க வேண்டும் என்பதே மிருககாட்சி சாலை பராமரிப்பாளர்களின் பிரதான நோக்கம். ஆனால் அதற்கு சில மாதங்கள் பிடிக்கலாம்.
ஒருவேளை அஃபியாவின் சொந்த அம்மா இதை வளர்க்க விரும்பாவிட்டால் அதன் சித்தி ரொமினா இதனிடம் அன்புகாட்டுவதால் அது இந்த குட்டியை வளர்க்க முயலலாம்.
ஆனால் இப்போதைக்கு மனித அம்மாவான லிண்ட்சியின் மடியே குட்டி கொரில்லா அஃபியாவுக்கு தாய்மடியாய் இருந்து தாலாட்ட வைக்கிறது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating