டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் படையினர்..!!

Read Time:1 Minute, 37 Second

downloadதேசிய டெங்கு ஒழிப்பு தினத்தையொட்டி மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழ் கடமையாற்றும் படையினர் நுளம்பு பெருகுவதை தடுக்கும் நிகழ்ச்சித் திட்டமொன்றினை முன்னெடுத்தனர்.

இச்சமூக நலன்புரி செயற்றிட்டம் மார்ச் 29 ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 04 ஆம் திகதி வரையான ஆறு நாட்கள் நடைறெவுள்ளன.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை, குருணாகல், மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் செயற்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தில் 14 மற்றும் 58 ஆம் படைப்பிரிவில் சேவையாற்றுகின்ற அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதேவேளை, மாத்தறை நில்வள ஆற்றில் கடல்நீர் ஊடுருவலைத் தடுக்கும் வகையில் மேற்கு பாதுகாப்புப்படை தலைமையகம், 58 ஆவது படைப்பிரிவின் கீழ் கடமையாற்றுகின்ற கெமுனு வோச் 3 இன் படைவீரர்களினால் மணல் மூலம் அணைகட்டப்பட்டது. தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் வேண்டுகோளுக்கிணங்க மேற்படி செயற்றிட்டம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடுமலை: கலப்பு திருமணம் செய்த மாணவர் கொலை: கவுசல்யா பெற்றோர் ஜாமீன் கேட்டு மனு…!!
Next post மட்டக்களப்பில் கஞ்சா கலந்த பாபுலுடன் இந்தியர் கைது..!!