உடுமலை: கலப்பு திருமணம் செய்த மாணவர் கொலை: கவுசல்யா பெற்றோர் ஜாமீன் கேட்டு மனு…!!

Read Time:1 Minute, 54 Second

201604021050572830_student-murder-case-kausalya-parents-asked-bail_SECVPFகலப்பு திருமணம் செய்த மாணவர் கொலை: கவுசல்யா பெற்றோர் ஜாமீன் கேட்டு மனு

உடுமலை கல்லூரி மாணவர் சங்கர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கவுசல்யாவின் பெற்றோருக்கு ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உடுமலையில் கலப்பு திருமணம் செய்து கொண்ட என்ஜினீயரிங் மாணவர் சங்கர் – கவுசல்யா ஆகியோர் கடந்த மாதம் 13–ந்தேதி தாக்கப்பட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த சங்கர் பலியானார். காயம் அடைந்த கவுசல்யா சிகிச்சைக்கு பின்பு சங்கர் வீட்டில் தற்போது வசித்து வருகிறார்.

இந்த கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த கவுசல்யாவின் தந்தை சின்னசாமி நிலக்கோட்டை கோர்ட்டில் சரண் அடைந்தார். மேலும் இந்த கொலையில் தேடப்பட்டு வந்த கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி கடந்த 2 நாட்களுக்கு முன்பு தேனி கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை உடுமலை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் சின்னசாமி, அன்னலட்சுமியை ஜாமீனில் விடுவிக்க கோரி திருப்பூர் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் கோவையை சேர்ந்த வக்கீல் ஜெயசந்திரன் மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை வருகிற 4–ந்தேதி நீதிபதி அலமேலு நடராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நெல்லை வேன் டிரைவர் கொலையில் 4 மாதத்துக்கு பின்னர் 7 பேர் பிடிபட்டனர்…!!
Next post டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் படையினர்..!!