நெல்லை வேன் டிரைவர் கொலையில் 4 மாதத்துக்கு பின்னர் 7 பேர் பிடிபட்டனர்…!!

Read Time:2 Minute, 23 Second

201604021238077071_one-man-murder-case-7-people-caught_SECVPFநெல்லையை அடுத்த தாழையூத்து அருகே உள்ள கீழ தென்கலம், காமராஜர் நகரைச் சேர்ந்தவர் தோமா மாணிக்கராஜ் கொலை வழக்கில் 7 பிடிபட்டனர்.

நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே உள்ள கீழ தென்கலம், காமராஜர் நகரைச் சேர்ந்தவர் தோமா மாணிக்கராஜ்(வயது46). இவர் நெல்லை சந்திப்பில் வேன் டிரைவராக இருந்தார். இவர் கடந்த 12.11.2015 அன்று அதிகாலை மோட்டார்சைக்கிளில் நெல்லை சந்திப்பில் இருந்து தென்கலத்திற்கு சென்று கொண்டிருந்தார். தாழையூத்து தென்கலம் ரோட்டில் ஸ்ரீநகர் ஸ்டாப் அருகே பைக் சென்ற போது சிலர் வழிமறித்து அரிவாளால் வெட்டினர்.

அதே இடத்தில் தோமா மாணிக்கராஜ் இறந்தார். கொலையாளிகள் அங்கிருந்து தப்பினர். சம்பவம் குறித்து தாழையூத்து போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர். இந்த கொலை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தியும் கொலையாளிகள் பற்றிய எந்த தகவலும் இல்லை. 4 மாதங்களை கடந்தும் இந்த கொலையில் துப்பு துலங்காமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த கொலையில் துப்பு துலங்கி உள்ளது.

தனிப்படையினர் விசாரணையில் தாழையூத்து பகுதியை சேர்ந்த 7 பேருக்கு இதில் தொடர்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.

வேறு ஒரு நபரை கொலை செய்ய வந்த கும்பல் ஆள்மாறாட்டத்தில் தோமா மாணிக்கராஜை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டிரைவர் வேலைக்கு குவைத்துக்கு சென்ற கணவரை மீட்க நடவடிக்கை கோரி மனைவி ஐகோர்ட்டில் மனு…!!
Next post உடுமலை: கலப்பு திருமணம் செய்த மாணவர் கொலை: கவுசல்யா பெற்றோர் ஜாமீன் கேட்டு மனு…!!