டிரைவர் வேலைக்கு குவைத்துக்கு சென்ற கணவரை மீட்க நடவடிக்கை கோரி மனைவி ஐகோர்ட்டில் மனு…!!

Read Time:4 Minute, 3 Second

201604021413064073_Husband-and-wife-who-went-to-Kuwait-to-work-with-the-driver_SECVPFடிரைவர் வேலைக்கு குவைத்துக்கு சென்ற கணவரை மீட்க நடவடிக்கை கோரி மனைவி ஐகோர்ட்டில் மனு மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு

அரியலூர் மாவட்டம், கீழபழுவூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜில்சத் பேகம். இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

என் கணவர் குல்சர் ஆலம் முஸ்தபா, டிரைவர் தொழில் செய்தார். சில ஆண்டுகள் வெளிநாட்டிலும் வேலை செய்தார். கடந்த 2014–ம் ஆண்டு தஞ்சாவூரில் உள்ள டிராவல்ஸ் நிறுவனம் மூலம் குவைத்தில் டிரைவர் வேலை கிடைத்தது. மாதம் 75 தினார் என்ற சம்பளத்தில் 2 ஆண்டு பணி ஒப்பந்தம் செய்து, அவர் 2014–ம் ஆண்டு அக்டோபர் மாதம் குவைத்து சென்றார்.

குவைத் சென்ற பின்னர் டிரைவர் வேலை வழங்காமல், அங்குள்ள முதலாளி வீட்டு வேலை செய்யும்படி என் கணவரை நிர்பந்தம் செய்துள்ளார். இதை ஏற்க மறுத்து என் கணவரை, கட்டாயப்படுத்தி வேலை செய்ய வைத்துள்ளார்.

2 மாதங்கள் அவர் வேலை செய்தார். நாளுக்கு நாள் வேலை பளு அதிகரித்ததால், சொந்த ஊருக்கு செல்ல அனுமதிக்கும்படி கேட்டுள்ளார். ஆனால் இதை ஏற்க மறுத்த முதலாளி, என் கணவரின் பாஸ்போட்டை தர மறுத்து விட்டார்.

இந்த நிலையில், கடந்த 2015–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் என்னை என் கணவர் போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது குவைத் குடியுரிமை அலுவலகத்தில் இருப்பதாகவும், பிரச்சினை பெரிதாகி விட்டதாகவும் கூறினார். மேலும், இந்திய தூதரகம் மூலம் தன்னை இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கும்படி கூறினார்.

அதன்பின்னர் என்னை என் கணவர் தொடர்புக் கொள்ளவில்லை. அவரைப் பற்றி எந்த தகவலும் இது வரை கிடைக்கவில்லை. தற்போது என் கணவரை குவைத்தில் உள்ளவர்கள் சட்டவிரோதமாக பிடித்து வைத்து அடித்து துன்புறுத்துவதாக கருதுகிறேன்.

நான் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் என் கணவரை காப்பாற்றும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை மனு கொடுத்தேன். மத்திய வெளிவிவகாரத்துறை அமைச்சகம், என் புகாரை பரிசீலிப்பதாக பதில் அனுப்பியது. அதன்பின்னர் எந்த பதிலும் வரவில்லை.

நான் 4 வயது மகனுடன் கடுமைவக சிரமத்தில் உள்ளேன். என் கணவரின் வருமானத்தை நம்பியே நாங்கள் வாழ்கிறோம். அவரது நிலை என்ன? என்று தெரியவில்லை.

எனவே, என் கணவரை கண்டு பிடித்து, அவரை இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஏ.இளைய பெருமாள் ஆஜராகி வாதிட்டார். பின்னர், இந்த மனுவுக்கு 2 வாரத்துக்குள் பதிலளிக்கும்படி மத்திய வெளிவிவகாரத்துறை செயலருக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தர விட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நண்பரின் மனைவியை கொலை செய்த வழக்கு: சிங்கப்பூரில் இந்தியருக்கு 10 ஆண்டு சிறை…!!
Next post நெல்லை வேன் டிரைவர் கொலையில் 4 மாதத்துக்கு பின்னர் 7 பேர் பிடிபட்டனர்…!!