வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட மாணவி தற்கொலைக்கு முயற்சி…!!
மூன்று வருடங்களுக்கு முன்னர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட 16 வயது மாணவியொருவர் மண்ணெண்ணெய் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் ஒன்று மாதம்பையில் இடம்பெற்றுள்ளது .
மேற்படி மாணவி சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டடுள்ளார். இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் தனது அயல் வீட்டு நண்பி ஒருவரின் பாட்டனால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ள விடயம் தெரிய வந்திருப்பதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்தனர்.
மாதம்பை பொலிஸார் பாடசாலை மட்டத்தில் நடத்திவரும் சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்களிலிருந்து தப்பிப்பது மற்றும் அச்சம்பவங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் செயலமர்வில் கலந்து கொண்டிருந்த குறித்த மாணவி பின்னர் வீட்டுக்குச் சென்று இவ்வாறு மண்ணெண்ணெய் அருந்தியிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போது 16 வயது நிரம்பிய குறித்த மாணவி கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் தனது நண்பியின் அயல் வீட்டுக்கு கல்வி நடவடிக்கைகளுக்காகச் சென்று வருவதைப் பழக்கமாகக் கொண்டிருந்துள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற சமயம் அவ்வாறு தனது நண்பி வீட்டுக்கு இம்மாணவி சென்ற சமயம் அங்கு நண்பியின் பாட்டன் மாத்திரமே இருந்ததாகவும், அப்போது 13 வயதுடைய இச்சிறுமியை நண்பியின் பாட்டன் பலவந்தமாக வீட்டு அறையொன்றினுள் கூட்டிச் சென்று இவ்வாறு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியிருப்பதாகவும்,
அச்சமயம் இச்சம்பவம் அச்சிறுமிக்கு அவ்வளவு பாரதூரமானதாகத் தெரிந்திருக்கவில்லை எனவும், குறித்த சந்தேக நபரினால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் காரணமாக இதனை அச்சிறுமி வெளியில் எவரிடமும் கூறியிருக்கவில்லை எனவும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தெரியவந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாடசாலை மாணவர்களுக்காக பொலிஸார் நடத்திய செயலமர்வின் போது தனக்கு நேர்ந்த கொடுர நிலை நினைவுக்கு வந்து தான் துர்ப்பாக்கிய நிலைக்கு உள்ளாகியிருப்பதைப் புரிந்து கொண்டதனால் மனவிரக்திக்கு உள்ளான இம்மாணவி வீட்டுக்கு வந்து மண்ணெண்ணெய் அருந்தி தற்கொலை செய்து கொள்ள முயன்றிருப்பது அம்மாணவியிடம் பெற்றுக் கொண்ட வாய்மொழியின் ஊடாகத் தெரியவந்திருப்பதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த மாணவியை இவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்திய சந்தேக நபர் காக்கப்பள்ளி மணக்குளம் பிரதேசத்தில் வசிப்பவர் எனவும், அவர் தற்போது பிரதேசத்தை விட்டுத் தலைமறைவாகியிருப்பதாகவும் அவரைக் கூடிய விரைவில் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாகவும் மாதம்பை பொலிஸார் தெரிவித்தனர்
Average Rating