ரஜீவ்காந்தியைக் கொன்ற புலிகளை தூக்கில் இடாதிருப்பதேன்?: இந்திய மத்திய அரசிடம் ஜெயலலிதா கேள்வி
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ்காந்தியை படுகொலை செய்த புலிகளை இன்றுவரை தூக்கில் இடாமல் மத்திய அரசு மெத்தனப் போக்கை கடைபிடிப்பதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தீவிரவாத மற்றும் பயங்கரவாத சக்திகள் தமிழ் நாட்டிற்குள் சுதந்திரமாக நடமாடுவதோடு மட்டுமல்லாமல், கூட்டணிக்குள்ளும் நடமாடிக் கொண்டிருக்கின்றன என்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அண்மையில் வழங்கியுள்ள பேட்டியே சிறந்த சான்றாகும். உண்மை நிலையை புரிந்துகொள்ளாமல் மனம் போன போக்கில் சட்ட விரோதமான செயலில் திருமாவளவன் ஈடுபடுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்த ஆண்டு, அதாவது 2007-ல் விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்படவில்லை என்று திருமாவளவன் வேடிக்கையான ஒரு கருத்தை சொல்லியிருக்கிறார். அதனால் தற்போது தடை ஏதுமில்லை என்று வாதாடியிருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தின் மீதான தடையை மத்திய அரசு நீடிக்கும். ஆகவே, தற்போதும் விடுதலைப்புலிகள் இயக்கம் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கம் தான். இந்த உண்மையை புரிந்துகொள்ளாமல் இந்த ஆண்டு எல்.ரீ.ரீ.ஈ. இயக்கம் தடை செய்யப்படவில்லை என்று கூறி திருமாவளவன் புலிகளுக்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்து பேசியிருப்பது தமிழ் நாட்டிற்கு மட்டுமல்லாது, இந்தியாவிற்கே பேராபத்தை ஏற்படுத்தக் கூடிய தண்டனைக்குரிய செயலாகும்.
ரஜீவ்காந்தியை கொன்றவர்களுக்கு கொடுக்கப்பட்ட மரண தண்டனையை உச்சநீதிமன்றம் 1999-ல் உறுதி செய்த பிறகு எட்டு ஆண்டுகள் ஆகியும் அது இன்னும் நிறைவேற்றப்படவில்லை. கருணை மனு என்கிற பெயரில் யாருடைய இலாக்காவில் அந்த கோப்பு தூங்கிக் கொண்டிருக்கிறது? அப்படியே அந்தக் கோப்பு கிடப்பில் போடப்பட்டாலும் காங்கிரஸ் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய உள்துறை அதனை வெளிச்சத்துக்குக் கொண்டுவர வேண்டாமா? எதற்காக மவுனம்? ஏன் மவுனம்?
ரஜீவ்காந்தியை மிகக் கோரமான முறையில் படுகொலை செய்தவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்றுவதில் சோனியா காந்திக்கு அக்கறை இல்லையா? காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி அரசுக்கு இதில் விருப்பம் இல்லையா? ஏன்?
தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரிப்பவர்கள் மீது மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால், காஷ்மீர், பஞ்சாப், அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தற்போது தலைவிரித்தாடும் தீவிரவாதச் செயல்கள் மென்மேலும் அதிகரித்து, இந்திய இறையாண்மைக்கே பங்கம் விளைவிக்கக் கூடிய பேராபத்தாக மாறிவிடும் என்பதை மத்திய அரசுக்கு ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கூற விரும்புகிறேன் என்றும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...