மேடை சரிந்து விழுந்தது: வருண் காந்தி உயிர் தப்பினார்…!!

Read Time:1 Minute, 30 Second

1ae21e28-f6c9-4453-a220-6858cf680676_S_secvpfமத்திய மந்திரி மேனகா காந்தியின் மகனும் பா.ஜ.க., எம்.பி.யுமான வருண் காந்தி இன்று தனது 36-வது பிறந்தநாளையொட்டி உத்தரப்பிரதேசம் மாநிலம், மொராதாபாத் மாவட்டத்தின் சாஜ்லெட் பகுதியில் உள்ள விவசாயிகளை சந்திக்க மாவட்ட கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதற்காக, காரில் வந்த வருண் காந்திக்கு மொராதாபாத்-ஹரித்வார் நெடுஞ்சாலையில் மொராதாபாத் நகர மேயர் வீணா அகர்வால், உள்ளூர் எம்.பி., சர்வேஷ் குமார் உள்ளிட்ட பா.ஜ.க.வினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். வருண் காந்திக்கு சால்வைகள் அணிவிப்பதற்காக அங்கு அமைக்கப்பட்டிருந்த சிறிய தற்காலிக மேடைமீது ஏராளமான பா.ஜ.க., தொண்டர்கள் போட்டிப்போட்டுக் கொண்டு ஏறினர்.

அந்த பாரம் தாங்காமல் அந்த மேடை சரிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் வருண் காந்தி காயமேதுமின்றி உயிர் தப்பியதாக மொராதாபாத் போலீஸ் துணை சூப்பிரண்ட் யஷ்விர் சிங் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வீட்டு பாடம் செய்யாத மாணவர்களை நிர்வாணமாக நிற்கவைத்தவர்கள் மீது எப்.ஐ.ஆர்….!!
Next post வெளியூரில் இருந்து பெற்றோருடன் திருமண விழாவுக்கு வந்த 7 வயது சிறுமி கற்பழித்துக் கொலை…!!