நீலகிரியில் வடமாநில தொழிலாளியை அடித்துக் கொன்ற புலி…!!
நீலகிரி மாவட்டத்தில் மனிதர்கள்– விலங்குகள் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வன விலங்குகளின் அட்டூழியத்தை தடுக்க இதுவரை வனத்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு உரிய பலன் கிடைக்க வில்லை.
தேயிலை தோட்டங்களுக்கு செல்லும் தொழிலாளர்களை காட்டுயானைகள் ஓடஓட விரட்டி மிதித்து கொல்வதும், புதர்மறையில் பதுங்கியிருக்கும் புலிகள் பாய்ந்து தாக்கிக்கொல்வதும் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது.
பொதுமக்களை அச்சுறுத்திய புலியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடுகின்றனர். இருப்பினும் அவைகள் மீண்டும் குடியிருப்பு பகுதிக்கு வந்து பொதுமக்களின் உயிருக்கு உலை வைக்கின்றன.
இந்தநிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே வடமாநில தொழிலாளியை புலி அடித்துக்கொன்ற கொடூரம் நடந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவர்சோலையில் தனியார் எஸ்டேட் உள்ளது. இங்கு ஜார்கண்ட் உள்ளிட்ட வடமாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் வேலை பார்த்து வருகிறார்கள்.
இந்த தோட்டத்து சாலையில் மகு வயது (45) என்பவர் தனது மனைவி சோமாரியுடன் தங்கியிருந்தார். நேற்று இரவு வீட்டின் வெளியே மகு நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு பாய்ந்த வந்த புலி அவரை தாக்கியது.
பின்னர் கழுத்தை கடித்து தரதரவென இழுத்துச்சென்றது. புதர்மறைவுக்குள் கொண்டு சென்ற புலி மகுவின் கழுத்தை கடித்து துண்டித்தது.
பின்னர் உடலை இழுத்துக் கொண்டு 2 கி.மீட்டர் தூரத்துக்கு ஓடியது. அங்கு தனது கோரப்பசிக்கு மகுவின் உடலை இரையாக்கிக்கொண்டது. கணவரை வெகுநேரமாக காணாததால் அவரது மனைவி சோமாரி அதிர்ச்சியடைந்தார். அக்கம் பக்கத்தினரிடம் தனது கணவரை காணவில்லை என்று கூறினார்.
அவர்கள் இன்று காலை மகுவை தேடிச்சென்றனர். அப்போது அதே பகுதியில் புதர்மறைவில் மகுவின் தலைமட்டும் கிடந்தது. உடலை காணவில்லை. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
புலியின் கால் தடத்தை வைத்து அதன் வழியே சென்றனர். 2 கி.மீட்டர் தூரத்தில் மகுவின் உடல் எலும்புக்கூடாக கிடப்பது தெரியவந்தது.
இந்த செய்தி காட்டுத்தீ போல் பரவியது. இது குறித்து வனத்துறையினர், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். தொழிலாளியை கோரமாக புலி தாக்கி கொன்றுள்ளதை வனத்துறையினர் உறுதி செய்தனர்.
ஆட்கொல்லி புலி கடந்த ஆண்டு இதேபோன்று ஒரு தொழிலாளியை அடித்துக்கொன்றது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பொதுமக்களிடம் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating