இலங்கையின் தேசிய மலராக அல்லி மலர் பெயரிடப்பட்டுள்ளது..!!

Read Time:1 Minute, 44 Second

timthumbநாட்டின் தேசிய மலராக அல்லி பூ பெயரிடப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் நாட்டின் தேசிய மலராக நீலோற்பவம் காணப்பட்டது.

அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய உயிர்பல்வகைமைத்துவ அலுவலகத்தின் பணிப்பாளர் பத்மா அபேகோன் தெரிவித்துள்ளார்.

தேசிய மலர் தொடர்பில் விசேட குழுவினால் விரிவாக ஆராயப்பட்டதை அடுத்தே புதிய தேசிய மலர் தொடர்பில் யோசனை முன்வைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் தேசிய மலராக காணப்பட்ட நீலோற்பவத்திற்கு பதிலாக வேறொரு மலரின் நிழற்படங்கள் மற்றும் தவறான தகவல்கள் காணப்படுவதாக அண்மையில் பல விமர்சனங்கள் எழுந்தன.

நீலோற்பவத்திற்கு பதிலாக வேறொரு நிழற்படம் இணையத்தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளதாகவும் குறித்த விசேட குழுவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது தொடர்பில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களை தெளிவுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய உயிர்பல்வகைமைத்துவ அலுவலகத்தின் பணிப்பாளர் பத்மா அபேகோன் மேலும் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தென்காசி அருகே மாணவருடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை சிறையில் அடைப்பு…!!
Next post 112 வயது இஸ்ரேலியர், உலகின் வயதான மனிதர்: கின்னஸ் சாதனை படைத்தார்..!!